மேற்கு ஆசியாவில் இடம்பெறும் போர் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஆபத்து

மேற்கு ஆசியாவில் கடந்த 3 வாரங்களாக இடம்பெறும் போர் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என இலங்கையின் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த மோதல்களால் இலங்கை முன்னர் சந்தித்த பொருளாதார நெருக்கடியை விட கடுமையான நெருக்கடிகளை சந்திக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. உக்ரைன் – ரஸ்யா போர் ஏற்படுத்திய பாதிப்புக்களை விட இது மேலும் கடுமையானது.

அமைதி ஏற்படுவதற்கான வாய்புக்கள் இரு தரப்பிலும் இல்லை. எனவே தொடர் மோதல்கள் உலகத்தின் பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும், அது இலங்கையின் பொருளாதாரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்களின் விலையேற்றம் ஒருபுறம் இருக்க, இலங்கையின் சுற்றுலாப்பயணத்துறை மற்றும் ஏற்றுமதித்துறை என்பனவும் பாதிப்படையலாம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.