மொட்டு அணி நிறைவேற்றுக் குழு அவசரமாக கூடுகிறது – ரணிலை ஆதரிப்பது குறித்து இறுதி முடிவு

basil ranil mahinda மொட்டு அணி நிறைவேற்றுக் குழு அவசரமாக கூடுகிறது - ரணிலை ஆதரிப்பது குறித்து இறுதி முடிவுஇலங்கை அரசியல் தோ்தலுக்காக பரபரப்பாகவுள்ள நிலையில், சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக் குழுக் அடுத்த இரு வாரங்களுக்குள் நடைபெறவுள்ளது எனத் தெரியவருகின்றது.

கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், பஸில் ராஜபக்ஷவின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தின்போது ஜனாதிபதித் தோ்தலை எதிா்கொள்வது தொடா்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

அமெரிக்காவில் இருந்து பஸில் நாடு திரும்பிய பின்னர், மஹிந்தவுடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தாா். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தன்னை ஆதரிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு ராஜபக்ஷக்கள் நேரடிப் பதிலை வழங்கவில்லை.

இந்நிலையிலேயே மொட்டுக் கட்சியின் உயர்பீடம் கூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின் எட்டப்படும் முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு, ரணில் விக்கிரமசிங்கவுடன் மஹிந்த, பஸில் இரண்டாம் சுற்றுச் சந்திப்பை நடத்தவுள்ள
னர். இந்தச் சந்திப்பின்போது அடுத்த தேர்தல், கூட்டணி தொடர்பில் இறுதியான முடிவு எடுக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.