யுத்த குற்றங்களை மறுக்கும் ஒருவரை ஆலோசகராக நியமித்துள்ள சஜித் – அம்பிகா விசனம்

அம்பிகா தொடர்பான வெளிவிகார அமைச்சின் அறிக்கையுத்த குற்றங்கள் இடம்பெற்றதை மறுக்கும் ஒருவரை ஆலோசகராக ஐக்கியமக்கள் சக்தி நியமித்துள்ளமை குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் டுவிட்டரில் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

2222 யுத்த குற்றங்களை மறுக்கும் ஒருவரை ஆலோசகராக நியமித்துள்ள சஜித் - அம்பிகா விசனம்
முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் நேற்று இணைந்த போது..
ஐக்கிய மக்கள் சக்தி யுத்த குற்றங்கள் இடம்பெற்றதை மறுக்கும் ஒருவரை ஆலோசகராக நியமித்துள்ளதுடன் மனிதாபிமான நடவடிக்கைகள் என்ற பதத்தை பயன்படுத்தியிருப்பது இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது யுத்த குற்றங்கள் இடம்பெறவி;ல்லை எனவும் எவரையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த வேண்டியதில்லை எனவும் அந்த கட்சி கருதுவதை வெளிப்படுத்தியுள்ளது என அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையின் அனைத்து கட்சிகளும் இந்த விடயத்தில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை கொண்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.