‘ரணிலுக்கு எங்களின் ஆதரவை வழங்கப்போவதில்லை’: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த நிலையில், பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ல என அறிவித்துள்ளது.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எங்களின் ஆதரவை வழங்கப்போவதில்லை எனவும் தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவரும், ராஜபக்ஷ குடும்ப உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.