ரஷ்யப் படையில் கூலிப்படைகளாக இணையும் இலங்கை முன்னாள் இராணுவத்தினா் – சக்திவாய்ந்த மேற்குலக நாடு அதிருப்தி

உக்ரேனுக்கு எதிரான போரில் இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்துகொள்வது குறித்து சக்திவாய்ந்த மேற்குலக நாடு கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்கத்திய நாடுகளின் கவலைகளை அடுத்து, ரஷ்ய இராணுவத்தின் கூலிப்படையினராகப் போரிடும் இலங்கையர்கள் பற்றிய விவரங்களைத் தேடுவதற்கு, ரஷ்ய அதிகாரிகளுடன் தொடா்பாடல்களை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இராஜதந்திர நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தலைமையிலான குழுவும் மொஸ்கோவிற்கு விஜயம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவிற்கு எதிராகப் போரிடுவதற்காக உக்ரேனியப் படைகளுடன் சில இலங்கையர்களும் இணைந்துள்ளதாக அந்த வட்டாரம் தெரிவித்தது.

ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள போர் முனையில் உள்ள இலங்கை ராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பு அமைச்சிடம் இது தொடா்பாக கேள்விகளை எழுப்பி வருகின்றாா்கள்.

சமீபத்தில், போர்முனைக்கு ஆட்களை கடத்திய சிலரையும் பொலிசார் கைது செய்தனர். பெரும்பாலான இலங்கையர்கள் ரஷ்யா மற்றும் உக்ரேனில் உள்ள இரண்டு இராணுவங்களுடன் இணைந்து பணம் மற்றும் பிற சலுகைகளுக்காக தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.