ரஷ்ய – உக்ரைன் போா் முனையில் ஆயிரம் இலங்கைப் படையினா்- சி.ஐ.டி. தகவல்

10 ரஷ்ய - உக்ரைன் போா் முனையில் ஆயிரம் இலங்கைப் படையினா்- சி.ஐ.டி. தகவல்ரஷ்ய – உக்ரைன் போர் முனையில் சுமார் 1,000 இலங்கைக் கூலிப் படையினர் இருப்பதாக, அங்கிருந்து இலங்கைக்குத் திரும்பியவர்களின் தகவல்கள் தெரிவிப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (சி.ஐ.டி.) தெரிவித்துள்ளது.

ரஷ்யஉக்ரைன் போர் முனைக்கு அனுப்பப்பட்டவர்களில் ஒரு சிப்பாய்க்கு தலா 3 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டுபவர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவில் இருந்து செயற்படும் இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர், இலங்கையில் உள்ள ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து ஆட்சேர்ப்புகளை ஒருங்கிணைத்து வருவதாக சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.

“ரமேஷ்” என்ற மற்றொருவரும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆட்சேர்ப்பில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் ரஷ்ய மொழியில் உள்ளது. ரஷ்ய போர் முனையில் இருந்த இலங்கை முன்னாள் இராணுவத்தினர் மூவர் இலங்கை திரும்பியுள்ளதாக குற்றப் புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டவர்களில் 300ற்கும் அதிகமானோர் போரில் ஈடுபட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார். கொழும்பில்
இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 200ற்கும் அதிகமானோர் தற்போது முகாம்களில் பயிற்சி பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஸ்ய உக்ரைன் மோதலுக்காக இலங்கையிலிருந்து 800ற்கும் அதிகமானோர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

ரஸ்ய யுக்ரைன் மோதலில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து வெளியேறிய 14 ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக 8 பேர் உயிரிழந்ததாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி ஒருவர்தெரிவித்திருந்தார்.