வடக்கு கிழக்கு மக்கள் பிரச்சினையில் அரசாங்கம் கள்ள மௌனம் – தேசிய மக்கள் சக்தி

3 7 9 1 வடக்கு கிழக்கு மக்கள் பிரச்சினையில் அரசாங்கம் கள்ள மௌனம் - தேசிய மக்கள் சக்திவடக்கு, கிழக்கில் மக்களின் பிரச்னைகளுக்கு பதில் அளிக்காமல் அரசாங்கம் கள்ள மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறது என்று தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

அந்தக் கட்சி நடத்திய மகளிர் தின நிகழ்வில் பங்கேற்ற தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மக்களுக்கு தொழில்வாய்ப்புகள இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. இந்த மக்களின் விவசாயக் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. நில ஆக்கிரமிப்பு தொடர்கிறது. விவசாயக் காணிகள் விடுவிக்கப்படவில்லை. அதைப்போல, இளைஞர்கள் போதைப்பொருள்
பாவனையில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

வடக்கு, கிழக்கில் காணிப் பிரச்னை, காணாமலாக்கப்பட்டோர் பிரச்னை, கணவனை இழந்த பெண்கள் முகம்கொடுக்கின்ற பிரச்னை, மீனவர்களின் பிரச்னை போன்றவற்றுக்கு இன்னமும் தீர்வு கிட்டவில்லை. இவற்றுக்கு எவ்வித பதிலையும் வழங்காது அரசாங்கம் கள்ளமௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறது” என்று கூறினார்.