வாழ்வாதாரத்தை மேம்படுத்த கால் நடைகள் வழங்கி வைப்பு

தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பகுதிகளில் வாழ்வாதார திட்டமாக கால் நடை வளர்ப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான ஆடுகள் இன்று (06) பிரதேச செயலக வளாகத்தில் வைத்து  வழங்கி வைக்கப்பட்டன.

விவசாய அமைச்சின் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்காக 28 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு 108 ஆடுகள் வழங்கப்பட்டன.

கால் நடை வளர்ப்பின் மூலமாக வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

 

இதில் தம்பலகாமம் பிரதேச கால் நடை வைத்திய அதிகாரி,பிரதேச செயலக திட்டமிடல் பிரதம முகாமைத்துவ உதவியாளர்,விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.