ஹமாஸ் – இஸ்ரேல் மோதல் 525 இராணுவத்தினர் பலி

கடந்த வருடம் ஒக்டேதபர் 7 ஆம் நாள் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தரைத்தாக்குதல்களில் இதுவரையில் தமது தரப்பில் 525 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 5 பேர் கேணல் தர அதிகாரிகள் எனவும் இஸ்ரேலிய தகவல்கள் தெரிவித்துள்ளன.

Israel ஹமாஸ் - இஸ்ரேல் மோதல் 525 இராணுவத்தினர் பலிஇந்த வாரம் காசா பகுதியில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் 9 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 30 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

அமேசமயம், இஸ்ரேலிய அரசு மேற்கொண்டுவரும் வான் மற்றும் எறிகணைத்தாக்குதல்களால் இதுவரையில் காசா பகுதியில் 23,700 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 60,000 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 10,000 இற்கு மேற்பட்டவர்கள் சிறுவர்கள். இந்த தாக்குதல்களில் 117 பாலஸ்தீன ஊடகவியலாளர்களும் கடந்த 94 நாட்களில் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனிடையே லெபான் பகுதிகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டுவரும் வான் தாக்குதல்களில் பலர் கொல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் படையணி ஒன்றின் பிரதி கட்டளை அதிகாரி ஒருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.