எம கடமை – உலக சூழலை வைத்து – தொடர்வது

நாம் வருடா வருடம் எமது மாவீரர்கள் அவர்கள் தியாகத்தை முன்னிறுத்தி நினைவுகூறுகிறோம், உலகம் அவர்களை பயங்கரவாதிகள் என்று கூறிக்கொண்டு இருக்கிறது.உலகம் எவ்வாறு பயங்கரவாத்தைதை நிர்ணயிக்கின்றது – 2009 மாபெரும் அழிப்புடன் முடிந்த எமது விடுதைலான தியாகங்களுடன் ஆனா போராட்டம் பயங்கராவாதுக்கு எதிரான வெற்றி என்று உலகம் கூறியது.இன்றும் போர் இல்லாத சூழலிலும் பயங்கரவாதம் என்ற அடையாளம் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது, அதட்கான காரணம் என்ன என்பதை நாம் அவதானிக்க வேண்டும்.இந்த உலக சூழலை நாம் ஆழமாக பார்த்தல், ஒரு சில வல்லரசுகள் , காலனித்துவ காலத்தில் உலக நாடுகளில் பெரும்பாலான பகுதியை தமது ஆளுமைக்குள் வைந்திருத்தவர்கள், காலனித்துவ காலத்தின் பின்பு தமது புவியில் ஆளுமையை தொடர்ச்சியாக வைத்திருக்க விரும்புகிறார்கள்.mavee எம கடமை - உலக சூழலை வைத்து - தொடர்வதுஅதனால் தான் நெல்சன் மண்டேலா பயங்கரவாதி ஆனார், யஸீர் அரபாத் பயங்கரவாதி ஆனார், இன்றும் குர்திஸ்தான் விடுதலை அமைப்புக்கள் ஆக இன்றும் இருக்கிறார்கள்.தலிபான்கள் வல்லரசுகளின் நலனுக்காக உருவாக்கப்பட்டவர்ர்கள், ஹம்ஸ – பலஸ்தீனா விடுதலை அமைப்பை பலவீன படுத்த  உருவாக்கப்பட்ட அம்மைப்பு என்பதை ஆய்வுகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.உலக வல்லரசுகளின் தேவை கருதி நல்ல மக்கள், தேவையின் போது நாலவர்கள் ஆக கருதப்படுகிறார்கள், அத்தேவை முடிந்த பின் அதே நலன்கள் மாறும் போது பயங்கரவாதிகள் ஆக்கப்படுகிறார்கள். அரசுகளின் புவியில் அரசியலில் மக்கள் தியாகம் செய்யப்படுகிறார்கள், அதை காண்கூடாக நாம் பார்த்து வாழ்ந்து கொண்டுஇருக்கிரோம்.இன்று உலகத்தில் வாழும் பல கோடி தமிழ்  மக்கள் எமது போராட்டத்தையும் மாவீரர்களையும் – அவர்களின் தியாகத்தை நினைத்து – தமிழை காக்க பிறந்த வீரர்கள் என்று வணங்குகிறார்கள்.2009 போரின் பின் பல பத்திரிகையாளர்கள் – உலக பொருளாதார – புவியில் ஆக்கிரமபிக்குக்காக இலங்கையில் தமிழர்கள் உயிர்பலி அல்லது தியாகம் செய்யப்பட்டார்கள் என்று எழுதி இருந்தார்.இந்த வல்லரசு நடாத்தும் போரில் தொடர்ச்சியாக பாதிக்கப்படுபவர்கள் – அழிக்கப்படுபவர்கள் – மக்கள் மட்டுமே.நாம் பல சவாலுக்குள் தொடர்ந்து போராடிக்கொண்டு கொண்டு இருக்கிறோம் – காரணம் நாம் பயங்கரவாதம் செய்யவில்லை – தொடர்ச்சியாக அழிக்கப்படும்  இனத்தைதை பாதுகாக்க – யாரும் எங்களை பாதுகாக்க முன்வராத சூழலில் – எம்மை – எம் மண்ணை பாதுகாக்க ஆயுதம் தூக்கியவர்கள்.அவர்கள் ஆயுத போராட்டத்தை நிறுத்தி – உலக மக்களிடம் கடமையை கொண்டது விட்டு தம்மை மண்ணுக்குள் வித்தாகி போனார்கள்.எம கடமை – உலக சூழலை வைத்து – தொடர்வது.

திருச்சோதி திருகுலசிங்கம்