நேபாளம், மாலத்தீவு, பூட்டான், மொரிஷியஸ் உள்ளிட்ட 16 நாடுகள் விசாயின்றி இந்தியர்களை தமது நாட்டுக்குள் அனுமதிப்பதாக இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார் மத்திய இணை அமைச்சர் முரளிதரன்.
- பர்படாஸ்
- பூட்டான்
- டொமினிக்க குடியரசு
- கிரெனடா
- ஹைதி
- ஹாங்காங் (சிறப்பு நிர்வாகப் பகுதி)
- மாலத்தீவு
- மொரிசியஸ்
- மொன்செராட்
- நேபாளம்
- நியுவே தீவு
- சமோவா
- செனிகல்
- டிரினிடாட் மற்றும் டொபாகோ
- செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
- செர்பியா
இதைத் தவிர பல நாடுகள், அந்நாட்டுக்குள் நுழையும் போது நேரடியாக விசா பெறும் வசதியினை இந்தியர்களுக்கு வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.