1967 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட எல்லைகளின் அடிப்படையில் பாலஸ்தீனம் -ரஸ்யா

இஸ்ரேல் பாலஸ்தீன பேச்சு மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் அதனை எல்லோரும் கூட்டாக செய்ய வேண்டும். ஐ.நாவினால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தை இலக்காக கொண்டு இரு நாடுகள் என்ற தீர்வின் அடிப்படையில் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவேண்டும். கிழக்கு ஜெருசலத்தை தலைநகராக கொண்டு 1967 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட எல்லைகளின் அடிப்படையில் பாலஸ்தீன தேசம் உருவாக்கப்பட வேண்டும் என ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மோதல் மேலும் பரவாது வெளியார் தடுக்க வேண்டும். அந்த பிரதேசம் வியூகங்களின் அடிப்படையில் முக்கியமான பிரதேசம் என ரஸ்யா தெரிவித்துள்ளது. ஹமாஸ் மற்றும் ஈரான் அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் ரஸ்யா இந்த கருத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களை பாதுகாப்பது மற்றும் மனிதாபிமான மற்றும் சட்ட நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது தொடர்பிலான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் கடந்த வாரம் 120 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிராக அமெரிக்கி மற்றும் இஸ்ரேல் உட்பட 14 நாடுகள் வாக்களித்துள்ளன. 45 நாடுகள் கலந்துகொள்ளவில்லை.