தமிழரை இந்தியாவின் பிரதமராக்க உறுதியெடுப்போம்-மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

இந்தியாவின் பிரதமராக ஒரு தமிழரையாவது எதிர்வரும் காலங்களில் கொண்டுவருவதற்கு உறுதி பூணுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

 பாராளுமன்றத் தேர்தலுக்கு பா.ஜ.க தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டுதான் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆனபோதிலும் அதற்கான பணிகள் இப்போதே தொடங்கிவிட்டன.

தமிழ்நாட்டுக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கோவிலம்பாக்கத்தில் தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பா.ஜ.க நிர்வாகிகளை  சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் “தென்சென்னை பாராளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க வெற்றிபெற வேண்டும். பாராளுமன்றத் தேர்தலுக்காக தென்சென்னையில் சாவடி அமைக்கும் பணிகள் 60 சதவீதம் நடந்து முடிந்துவிட்டன. எதிர்வரும் காலத்தில் ஒரு தமிழனையாவது பிரதமராக்க வேண்டும்.

இருமுறை பிரதமர் வேட்பாளரை இழந்ததற்கு தி.மு.கதான் காரணம். எனவே தமிழரை பிரதமராக்க உறுதியெடுப்போம். எதிர்வரும் காலத்தில் பிரதமர் ஆசனத்தில் தமிழர் ஒருவரை அமர வைப்போம். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.