இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் ஆதரவு வழங்க வேண்டும்- இலங்கை வர்த்தக சம்மேளனம்

இலங்கையின் உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு அரசியல்தலைவர்களும் பொதுமக்களும் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கை வர்த்தக சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் அனைத்து அரசியல்கட்சிகளும் இந்த விடயத்தில் தொடர்புபட்ட அனைத்து பங்குதாரர்களும் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும்,உத்தேச கடன்மறுசீரமைப்பு திட்டத்தின் இறுதிவடிவிற்காக காத்திருக்கவேண்டும் என இலங்கை வர்த்தக சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது ஒட்டுமொத்த கடன்பேண்தகு நிகழ்சிநிரலை நோக்கிய ஒரு முக்கியமான நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள இலங்கை வர்த்தக சம்மேளனம் இதனுடன் தொடர்புபட்ட ஏனைய முக்கிய சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கும் இது முக்கியம் எனவும் தெரிவித்துள்ளது.

 நிதி அமைப்பின் ஸ்திரதன்மையை பேணுவதற்கே முன்னுரிமை வழங்கப்படும் வங்கிகளில் பணத்தினை வைப்புசெய்தவர்கள் மோசமாக பாதிக்கப்படாமலிருப்பதும் உறுதி செய்யப்படும் எனவும் இலங்கை வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் உள்நாட்டு கடன்மறுசீரமைப்பினை முன்னெடுக்கப்போவதாக அறிவித்த பின்னர் பல கடும் கரிசனைகள் வெளியாகியுள்ளன,இந்த கரிசனைகளை நாங்கள் புரிந்துகொள்கின்றோம், வெளிப்படையான கலந்துரையாடல்களிற்கான உரிமைகளை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம், என தெரிவித்துள்ள இலங்கை வர்த்தக சம்மேளனம்  எனவும் தெரிவித்துள்ளது.