22 வருடங்களாக பௌத்த விகாரையில் துன்புறுத்தலுக்குள்ளான முத்துராஜா குறித்து தாய்லாந்து தகவல்

முத்துராஜாவின் நிலைவேண்டாம்; இலங்கையில் இருந்து புறப்படும் இரு யானைகள்! -  ஜே.வி.பி நியூஸ்

22 வருடங்களாக இந்த நாட்டில் தங்கியிருந்து, நோய்வாய்ப்பட்டு தாய்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்ட முத்துராஜா யானை தாய்லாந்து மன்னரின் பராமரிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் சாக் சூரின் என்று அழைக்கப்படும் முத்துராஜா யானைக்கு தற்போது லம்பன் பகுதியில் உள்ள யானைகள் சரணாலயத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த யானை கடந்த 02ஆம் திகதி தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

அதன்படி தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன், முத்துராஜா யானையை பராமரிக்க முடிவு செய்துள்ளார்.

யானையின் தற்போதைய உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த அந்நாட்டின் சுற்றாடல் அமைச்சர் வரூத் சில்பா ஆச்சா, முத்துராஜாவின் வலது கண்ணில் கண்புரை ஏற்பட்டுள்ளதாகவும், முன் இடது காலை மடக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முதுகில் தொற்று ஏற்பட்டு காயம் காணப்படுவதுடன் நான்கு உள்ளங்கால்கள் மற்றும் நகங்களிலும் உபாதை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்து நல்லெண்ணத் தூதுவர்களாக வெளிநாடுகளுக்கு வழங்கிய யானைகள் பலவற்றை அந்நாடுகள் மிகவும் சிறப்பாகப் பராமரித்து வருவதாகவும் தாய்லாந்து சுற்றாடல் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.