பூமி வெப்பமாதலை தடுப்பதற்கு உலகம் தவறிவிட்டது – பிரித்தானியா விஞ்ஞானி

பூமி வெப்பமாதலை தொழில்துறை வளர்ச்சிக்கு முற்பட்ட அளவில் இருந்து 1.5 பாகை செல்சியல் உயர்வுக்கு கட்டுப்படுத்துவது என்று 2015 ஆம் ஆண்டு பரீஸ் நகரத்தில் இடம்பெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற உலக நாடுகள் தவறிவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றத்திற்கான அமைப்பின் முன்னாள் தலைவர் விஞ்ஞானி பொப் வற்சன் தெரிவித்துள்ளார்.

சீனா, அமெரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கடுமையான வெப்பநிலை
மாற்றம் ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் பல நகரங்களில் வெப்பகதிர்வீச்சு
எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. பல நாடுகளில் காட்டுத் தீயினால் பெருமளவான காடுகள் அழிந்துள்ளன இந்த நிலையில் வற்சன் இந்த எச்சரிக்கையை விடுத்தள்ளார்.

எரிபொருள் பாவனையை குறைந்து பூமி வெப்பமாவதை தடுப்பதில் இருந்து நாடுகள்
தவறி வருகின்றன. அவர்களால் 1.5 பாகை திட்டத்தை எட்டமுடியாது. அதனை பல
விஞ்ஞானிகளும் எற்றுக்கொண்டுள்ளனர். பூமி 2.5 பாகை உயர்வை காணும்.

1.5 பாகை வெப்பநிலை உயர்வை பேணி 2.0 பாகை வெப்பநிலை உயர்வை
தடுத்தால், 10 மில்லியன் மக்கள் வீடுகளை இழப்பதை தடுக்கலாம், குடிநீர் இல்லாமல் நெருக்கடிக்கு உள்ளாகும் மக்களின் எண்ணிக்கையை 50 விகிதமாக குறைக்கலாம், பவளப்பாறைகளின் அழிவை 99 விகிதத்தில் இருந்து 70 விகிதமாக குறைக்கலாம்.அவ்வாறு செய்வதற்கு எரிபொருள் பாவனையை எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு 50 விகிதமாக குறைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவத்துள்ளார்.