எதிர்காலம் அற்ற நிலையில் ஜி-20 – முன்னாள் இந்திய தூதுவர்

இந்தியாவில் இடம்பெறும் ஜி-20 மாநாட்டில் ரஸ்ய அதிபர் விளமிடீர் பூட்டீன் மற்றும் சீனா அதிபர் ஜின்ஜின்பிங் ஆகியோர் கலந்துகொள்ளாதது எள்பது அந்த அமைப்பின் வீழ்ச்சியை காட்டுவதாக இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும், ரஸ்யா, பிரான்ஸ், துருக்கி மற்றும் எகிப்த்துக்கான முன்னாள் தூதுவருமான கன்வால் சிபால் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி அடைந்துவரும் பொருளாதாரத்தை இணைத்து பயணிக்கும் அமைப்பாக இது உருவாக்கப்பட்டபோதும் அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான பொருளாதார தடைகளினால் இந்த அமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

உக்ரைன் போர் தொடர்பில் உக்ரைனுக்கு ஆதரவாக அறிக்கையை வெளியிடுமாறு அமெரிக்கா தொடர்ந்து இந்த அமைப்புக்கு அழுத்தம் கொடுத்துவருவது பொருளாதார அமைப்பை தனது அரசியல் நோக்கத்திற்காக அது பயன்படுத்த முனைவதையே காட்டுகின்றது.

பிறிக்ஸ் மற்றும் சங்காய் கூட்டமைப்புக்களில் சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் கவனம் செலுத்திவருவதால் ஜி-20 மாநாட்டிற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.