இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு மீண்டும் வீழ்ச்சி

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்புத் தொகை மீண்டும் கடந்த மாதம் வீழ்ச்சி கண்டுள்ளது. ஜுலை மாதத்துடன் ஒப்பிடும்போது இது 4.4 விகித வீழ்ச்சியாகும்.

ஜுலை மாதம் 3,765 மில்லியன் டொலர்களில் இருந்து வெளிநாட்டு கையிருப்பு கடந்த மாதம் 3,598 மில்லியன் டொலர்களாக வீழ்ச்சி கண்டுள்ளது.

இருந்தபோதும் இலங்கையின் சொத்துக்கள் மற்றும் சீனா வங்கியிடம் இருந்து பெறப்பட்ட நாணய பரிமாற்றம் உட்பட தற்போதைய வெளிநாட்டு கையிருப்பு 1.4 பில்லியன் டொலர்களாகும். ஆனால் அதனை பயன்படுத்துவதற்கு பல நிபந்தனைகள் உண்டு என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.