யார் அசாத் மௌலானா?

இந்தியா இராணுவத்தோடு இயங்கிய EPRLF அமைப்பை குடும்ப பின்னணியாக கொண்ட அசாத் மௌலானா நீண்டகாலமாக EPDP உறுப்பினராக டக்ளஸ் தேவானந்தவுடன் இயங்கி வந்தார்

தினமுரசு ஆசிரியர் அற்புதனை வீழ்த்தி தினமுரசை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர் தினமுரசில் டக்ளஸ் தேவானந்தா அசாத் மௌலானாவை பணியாளராக சேர்த்து கொண்டார்

டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசில் அரச மர முந்திரிகை கூட்டுத்தாபன தலைவரின் பணியாளர் குழுவிலும் அசாத் மௌலானா பணியாற்றி இருந்தார்

சம காலத்தில் 2004 ஆம் ஆண்டு கருணா குழு இராணுவ உளவு சேவைக்கு இணைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் இராணுவ அதிகாரிகளே கருணா குழுவின் மொழிபெயர்பாளர்களாக இருந்தார்கள்

இந்தியாவிலிருந்த ENDLF, மட்டக்களப்பில் இயங்கிய புளொட், புளொட் மோகன் குழு , ராசிக் குழு உட்பட பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் பலரும் கருணா குழுவில் இணைக்கப்பட்டு துணைப்படையாக விரிவாக்கப்பட்டு இயங்க தொடங்கி இருந்தது

இந்த சூழ்நிலையில் கிழக்கு மொழிநடை தெரிந்த மொழிபெயர்ப்பாளரின் அவசியம் உணரப்பட்ட புலனாய்வு துறையுடன் (MI) தொடர்பிலிருந்த டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரையுடன் அசாத் மௌலானா 2006 ஆம் ஆண்டு சித்திரை மாதம் EPDP யிலிருந்து கருணா குழுவிற்கு இடம்மாற்றப்பட்டார்

இதை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு ஆனி மாதம் பாதுகாப்பு அமைச்சில் கோட்டாபாய ராஜபக்சே மற்றும் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண ஆகியோரை அசாத் மௌலானா கருணா குழுவுடன் முதன் முதலில் சந்தித்து இருக்கின்றார்

ஆங்கிலத்தில் நடைபெற்ற மேற்படி 3 மணித்தியால கூட்டத்தில் கருணா குழுவை இராணுவ தேவைக்கு எப்படி பயனப்டுத்துவது என பேசப்பட்டதாக அசாத் மௌலானா தனது சாட்சியத்தில் பதிவு செய்து இருக்கின்றார்

குறித்த சந்திப்புக்கு தொடர்ந்து கருணா குழு பேச்சாளராக BBC,Reuters போன்ற ஊடகங்களில் அசாத் மௌலானா பேச தொடங்கினார்

இராணுவ புலனாய்வு பிரிவினர் கருணா குழுவின் பெயரில் தொடங்கிய தமிழ் அலை பத்திரிகைக்கு பொரளை விமான தள சூழலிலில் அலுவலகம் உருவாக்கப்பட்டு அந்த அலுவலகம் கூட அசாத் மௌலானா பொறுப்பில் விடப்பட்டது

அதே காலத்தில் கருணா குழுவிற்கு பொறுப்பாகவிருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மற்றும் MI பணிப்பாளர் பிரிகேடியர் அமல் கணசேனவுக்கும் பிள்ளையானுக்குமான தொடர்பாடல் மற்றும் நிதி கையாளுதல் பணிகளும் அசாத் மௌலானா வழங்கப்பட்டு இருந்தன

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே பிள்ளையான், அசாத் சாலே ஆகியோரின் உறவுகளும் வளர்ந்து பிள்ளையான் மற்றும் அசாத் மௌலானா ஆகியோர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே யின் நம்பிக்கைக்குரியவர்களாகவும் குறித்த காலத்திலேயே மாறினார்கள்

இதையெல்லாம் மறைத்து விட்டு அசாத் மௌலானா தான் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் தனது அலுவலக பணியில் சேர்ந்தார் என பிள்ளையான் பதட்டத்தில் பேசுவதில் எந்தவித உண்மையும் இல்லை

இனமொன்றின் குரல்