தமிழ் அரசியல்வாதிகள் கைவிட்டனர் – போரட்டத்தை கையிலெடுத்த மீனவர்கள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலினால் வடபகுதி தமிழ் மீனவர்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துவருகின்றனர். பல ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளன.

இந்த நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதுவதில் தமது காலத்தை விரையம் செய்துகொண்டிருக்கையில் தமிழ் மீனவர்கள் தாம் படகில் தமிழ் நாட்டுக்கு சென்று நேரிடையாக தமது எதிர்ப்புக்களை தெரிவிக்க முடிவெடுத்துள்ளனர்.

அதற்கு தேவையான நிதியை பொதுமக்களிடம் இருந்து சேகரிப்பதில் மீனவர்கள் ஈடுபட்டுவருகின்றர். இலங்கை அரசும், வடமாகாண தமிழ் அரசியல்வாதிகளும் கைவிட்ட நிலையில் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்தியாவினால் காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையில் நடத்தப்படும் கப்பல் சேவையை பயன்படுத்தி இந்தியா தமிழகம் சென்று கோரிகை;கையை முன்வைக்கலாம் என சிலர் கருத்து தெரிpவத்தபோதும், அது மிகவும் செலவுமிக்கது என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.