கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் பௌத்த துறவிகளின் அத்துமீறல்கள் – மட்டு.நகரான்

வடகிழக்கு மாகாணம் தமிழர் தாயகம் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிங்கள தேசம் இன்று பல்வேறு அச்சுறுத்தல்களை முன்னெடுத்துவருகின்றது.வடகிழக்கில் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை,தமிழர்கள் மீது கட்டவிழ்தப்படும் ஆக்கிரமிப்புகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகபோராடி வருபவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் இன்று பல்வேறு நெருக்குவாரங்களையும் அத்துமீறல்களை எதிர்கொண்டுவருவதுடன் கிழக்கில் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் வெளிவரும்போது அது தொடர்பில் பேசும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி வாய்மூடி மௌனிகளாக மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ellaavala in eastern with military கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் பௌத்த துறவிகளின் அத்துமீறல்கள் - மட்டு.நகரான்கிழக்கில் மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களையும் அச்சுறுத்தி பணியவைத்து தமது அத்துமீறிய செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியும் என்று நினைக்கும் சிங்கள பெரும்பான்மை அரசுகள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை மேற்கொண்டுவருகின்றது.

இந்த நாட்டில் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் வடகிழக்கு மாகாணத்தில் சிங்கள மயமாக்கல் செயற்பாடுகளும் தமிழர்களின் குரல்வளையை நசுக்கும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.அதிலும் கிழக்கில் தொல்பொருள் என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளுக்கு எதிராக குரல்கொடுக்கும் நபர்களை இலக்குவைத்தும் சனல்4 விவகாரத்தின் பின்னர் கிழக்கில் உள்ள ஒட்டுக்குழுவின் அரசியல்கட்சியொன்றின் செயற்பாடுகளை விமர்சிப்பவர்களும் இந்த நாட்டிற்கு எதிரானவர்களாக காட்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

திருகோணமலையில் கடந்த சில வாரங்களாக திருக்கோணமலையில் பிக்குகளின் அராஜகம் அதிகரித்துள்ள நிலையில், திருக்கோணமலை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மீது பயங்கரவாத தடுப்பு பிரிவினரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அச்சுறுத்தபட்டு வருகின்றனர்.

eastern Uni massacare 4 கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் பௌத்த துறவிகளின் அத்துமீறல்கள் - மட்டு.நகரான்பெரியகுளத்தில் சட்ட விரோத விகாரை அமைப்பதற்கு எதிராக போராடிய ராஜு எனும் சமூக செயற்பாட்டாளரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர், (19.09.2023) அவரது வீடு மற்றும் வேலை தளங்களுக்கு தேடிச்சென்று விசாரணை செய்ததுடன், தங்களுடைய அலுவலகத்துக்கு வருமாறும் அழைப்பானை விடுத்துள்ளனர். அவரை மிரட்டும் வகையிலும் நடந்து கொண்டுள்ளனர்.

இதேபோன்று மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அவர்கள் திருக்கோணமலையில் தாக்கப்பட்டதை தொடர்ந்து, திருக்கோணமலை முன்னணி செயற்பாட்டாளர்களையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தேடி வருகின்றனர்.இவ்வாறான தொடர் செயற்பாடுகளால், திருக்கோணமலை செயற்பாட்டாளர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

இது தொடர்பில் சமூக செயற்பாட்டாளர் ஒருவரிடம் வினாவிய போது, “பிக்குகள் மாவட்டத்தின் முக்கிய கூட்டமாகிய மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து இலங்கை ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான அவமானப்படுத்திய போதும் பிக்குக்களை இதுவரை கைது செய்யாத காவல்துறை, சமூக செயற்பாட்டாளர்கள் மீதும் மட்டும் இவ்வாறு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது இலங்கையின் சட்ட ஒழுங்கை கேள்விக்கு உட்படுத்தி உள்ளது” என்ற கருத்தை தெரிவித்தார்.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் யுத்தம் மௌனிக்கப்பட்ட காலம் தொடக்கம் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் இருப்புக்காகவும் போராடிவருபவர்களை அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள மனிதவுரிமை செயற்பாட்டாளர், தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஜீவரெத்தினம் தவேஸ்வரன் அவர்கள் கொழும்பில் இருந்து வந்த பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் 11 மணித்தியாலம் 30 நிமிடங்கள் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.

east pikku கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் பௌத்த துறவிகளின் அத்துமீறல்கள் - மட்டு.நகரான்03.10.2023 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு அழைப்பதாக இலங்கை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் கிடைக்கப்பெற்ற கடிதத்தின் படி  மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் காலை 9:15 மணிக்கு சென்று இருந்தார். அவர்கள் அனுப்பியிருந்த கடிதத்தில் எந்த விடயம் தொடர்பாக வாக்குமூலம் விசாரணை என குறிப்பிடப்படாத நிலையில் விசாரணையின் போது தங்களில் விடுதலைப்புலிகள் மீள் உருவாக்கம் தொடர்பாக சந்தேகம் இருப்பதாகவும் அது சார்ந்து விசாரிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. பின்னர்  காலை 9:15மணிக்கு விசாரணைக்கு சென்றவர் இரவு 08:45 மணிக்கு  வாக்குமூலம் மற்றும் விசாரணைகளின் பின்னர் வெளியில் விடுவிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

இது தொடர்பில் ஜீவரெத்தினம் தவேஸ்வரன் தெரிவிக்கையில் “இந்த விசாரணையின் போது அடிப்படை மனிதவுரிமை மீறப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட உள்ளதாகவும் கூறினார்.  நாட்டில் கடந்த கால பயங்கரவாத செயற்பாடுகளோடு தொடர்புபட்டவர்கள்  என குற்றம் சாட்டப்படுபவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடிக் கொண்டிருக்கையில் மனிதவுரிமை செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அச்சுறுத்தும் வகையில் விசாரணைக்கு உட்படுத்துவதென்பது அரசாங்கம் எதையோ திசைதிருப்புவதற்காக செய்யப்படுகின்ற நகர்வாகவே பார்க்கின்றேன். எனவே  ஜனநாயக மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தும் நாகரிகமற்ற செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என என்றார்.

இதேபோன்று கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட காணி அபகரிப்புகள், படுகொலைகள், கடத்தல்கள், அத்துமீறிய குடியேற்றங்கள் என பல்வேறு விடயங்கள் குறித்தும் சனல்4 விவகாரம் வெளிவந்த பின்னர் கிழக்கில் கடந்த காலத்தில் ஒட்டுக்களினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் குறித்து வெளிப்படையாக பேசிவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் வி.லவகுமார் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டுவருகின்றார்.
கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்தார் என்ற ரீதியில் சுமார் ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லவகுமார் பின்னர் மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவுதினம் அனுஸ்டித்தமைக்கு எதிராக பல தடவைகள் பயங்கரவாத தடுப்பிரிவினரால் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டவராகவுள்ளார்.

இவ்வாறான நிலையில் அண்மையில் சனல்4வெளியிட்ட தகவல்களின் பின்னர் பிள்ளையான் குழுவினால் கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட பல படுகொலைகள் மற்றும் தீவுச்சேனை என்னும் வதைமுகாம் தொடர்பான பல தகவல்களை வெளிப்படுத்திவந்த நிலையில் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.அவரது வீட்டுக்கு வந்த ஆயுதம் தாங்கிய இனந்தெரியாத நபர்களினால் அவர் மிரட்டப்பட்டுள்ளதுடன் எந்த விடயம் தொடர்பிலும் கதைக்ககூடாது எனவும் இல்லையென்றால் கொலைசெய்யப்படுவீர்கள் என்ற வகையில் அவர் மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் கடந்த காலத்தில் கிழக்கில் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு செயற்பாடுகள் குறித்து பேசுவதற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அச்சமடையச்செய்யும் சூழ்நிலையானது மிகவும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றது.
கடந்த காலத்திலும் மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைகள் குறித்து தொடர்ச்சியான செய்திகளை எழுதிய ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்ட நிலையில் சிவில்சமூக செயற்பாட்டாளர்களும் அச்சுறுத்தப்பட்டனர்.

எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக சந்தேகிக்கப்படும் காணி அபகரிப்புகள்,விகாரை அமைக்கும் நடவடிக்கைகள்,திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் போராட்டங்கள் நடைபெறுவதையும் அவற்றிற்கு எதிரான குரல்கள் மேல் எழுவதையும் தடுப்பதற்கான செயற்பாடுகள் மிகவும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறான அழுத்தங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை புலம்பெயர்தேசத்தில் உள்ளவர்களும் வடகிழக்கில் உள்ள தமிழ் தேசிய அரசியல் சக்திகளும் ஆதரவு வழங்கவேண்டும்.ஐநா மனித உரிமைகள் மாநாட்டில் இவை தொடர்பில் அதிகம் பேசப்பட்டு எங்களுக்குள்ள குரல்கள் நசுக்கப்படுவதை தடுக்கமுன்வரவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.