மாவீரர்களுக்குரிய மதிப்பை உலகு கொடுக்கவும் ஈழத்தமிழர் வெளியக தன்னாட்சியுரிமையை ஏற்கவும் உழைப்போம்

“ஈழத்தமிழர்கள் வீரத்தைக் கொண்டே விரல் மடிப்பதெனில் -கார்த்திகை மாதமே எமக்குக் கண்திறந்த மாதம் – ஈழத்தமிழருக்கு இருநூறு கைமுளைத்ததும் – ஈழத்தமிழருக்கு கூரிய வேல் துளைத்ததும் இந்த மாதத்தில்தான். தமிழரை மீண்டும் தமிழரென்றாக்க முதல்நாள் பிள்ளையொன்று விழி திறந்தது. தமிழரின் நெஞ்சில் இடிசொருகிவிட்டு மறுநாள் பிள்ளையொன்று விழி மூடியது. ஆண்டுகள் வேறாயினும் தேதிகள் அருகருகாயின. இது தற்செயலான சம்பவம் அல்ல.

கனகபுரம்1 மாவீரர்களுக்குரிய மதிப்பை உலகு கொடுக்கவும் ஈழத்தமிழர் வெளியக தன்னாட்சியுரிமையை ஏற்கவும் உழைப்போம்சரித்திரமான அதிசயம்.”,எனத் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைமைக்கவிஞனாகத் திகழ்ந்த புதுவை இரத்தினதுரை கவிதா நயத்துடன் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் 26.11.1954 இல் மண்ணில் மலர்ந்தமையையும் லெப்டினன்ட் சங்கர் (சத்தியநாதன் ) தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் வீரச்சாவடைந்த வீரனாக27.11.1982 இல் தாய் மண்ணின் விடுதலை வித்தாகியதையும் புதுவை இரத்தினதுரை அவர்கள் கவிதாமொழியில் வரலாற்றுப்பதிவாக்கிய வரிகள் இவை.

இதன் வழி ஈழத்தமிழர் வரலாற்றில் கார்த்திகை 26 அதன் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வரலாற்றை மாற்றுகின்ற வரலாற்றின் ஆற்றலாக அமைந்ததையும், லெப்டினன்ட் சங்கர் விடுதலை வரலாற்றின் உந்து சத்தியாக மாவீரப்பயணத்தை கார்த்திகை 27இல்  தொடக்கி வைத்தமையையும் புதுவை இரத்தினதுரை அவர்களின் கவிதா வரிகள் இன்தமிழால் ஒவ்வொரு தமிழனுடைய இதயத்திலும் வரலாற்றுப் பதிவாக்குகின்றன. அந்த வகையில் விழி திறந்த தலைவனை நன்றியோடு கொண்டாடும் கார்த்திகை 26ம் வழி திறந்த மாவீரனை கைபிடித்து எழுந்தே  மாவீரர் உறுதியின் உறைவிடங்களில் தேசவிருள் அகல மாவீர தீபம் ஏற்றி நாட்டையே ஒளித்தேசமாக்கி மரணமில்லாத அந்த மனிதகுலத்தின் வாழ்கின்ற வல்லமையைத் தமதாக்கி ஈழத்தமிழர்கள் தங்கள் தாயகத்தின் தேசிய நாளையும் அதுவாக்கி விதைகுழிப் பெருநாளாய் வித்துடல்கள் மேல் “மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி – வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி – விழிமூடி இங்கே துயில் கொள்ளும் வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி – இழிவாக வாழோம் தமிழீழப் போரில் இனிமேலும் ஒயோம் உறுதி.” ஏன ஈழத்தமிழர்களின் இறைமையின் காவற் தெய்வங்களின் காணிக்கைத் திருநாளில் ஊரே கூடி ஒப்பாரி வைக்காது உருக்கொண்டாடி உறுதி எடுத்துக்கொள்கையில் உலகெங்கும் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழர்களும் இணைந்தே உலகவிழாவாக மாவீரர்நாளை கார்த்திகை 27இல் முன்னெடுப்பது இன்றையத் தமிழர் சமகால வரலாறு.

கார்த்திகை மாதத்தில் பூப்பதாலும் மஞ்சள் சிவப்பு வர்ணமாய் மலர்வதாலும் அதன் கழுத்துப்போல் இருக்கின்ற நுனியில் அது நஞ்சைக் கொண்டிருக்கிறது என மலர் ஆய்வாளர்கள் கூறுவதாலும் கார்த்திகை மலரை மாவீர்களுக்கான சின்னமாக அறிவிக்கப்பட்டது என்பது தேசியக்கவிஞர் புதுவை இரத்தினதுறை அவர்களின்  கார்த்திகைப் பூ ஈழத்தமிழர்களின் தாயகத்து தேசிய மலராக தாயகத்தின் தேசிய நாளாம் மாவீர்நாளில் தாயகத்திலும் உலகெங்கும் வாழும் தமிழர்களாலும் அணியப்பெற்று வருவதும் சமகால ஈழத்தமிழர் பண்பாடாக உள்ளது.

தமிழரின் தொன்மையும் தொடர்ச்சியுமான சிவவழிபாட்டில் உலகையும் மக்களையும் காக்க உலகையும் மக்களையும் அழிக்க எழுந்த பாற்கடல் நஞ்சை சிவபெருமான் கழுத்திலே தாங்கினான் என்பதால் ‘நஞ்சுண்ட கண்டன் ‘ ‘நீல மிடற்றன்’ என்கின்ற சொல்லாடச்pகள் தமிழர் பண்பாட்டில் உலகையும் மக்களையும் காப்பதாகப் போற்றப்படும் கடவுளைக் குறித்து நிற்கின்றன.  இதனால் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளரைத் தெய்வமாகப் போற்றும் வழக்கம் தமிழர் பண்பாட்டு வழமையாகவுள்ளது. இதனைத் தமிழரின் மெய்ப்பொருள் நூலான திருக்குறள் தவம் என 27 வது இயலில் எடுத்து விளக்கி 268வது குறளில்

தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய

மன்னுயி ரெல்லாந் தொழும்

என மாவீரர்களைத் தெய்வமெனப் போற்றல் தமிழ்மரபு என்பதை உறுதி செய்கிறது. அதுமட்டுமல்லாது இல்லறவாழ்வின் பயன் இவ்வாறு வாழ்தலேயென 50வது திருக்குறளில்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்

எனத் தெளிவாக எடுத்துரைத்திருப்பதையும் காணலாம். அதுமட்டுமன்றி குடிமை குறித்து உலகிலேயே மிகச்சிறப்பான விளக்கத்தைத் தொகுத்து குடிமை என்னும் 96வது இயலை படைத்தளித்த வள்ளுவர் 955 வது குறளில்

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண்பிற் பிரித லின்று

kapaiy 11 மாவீரர்களுக்குரிய மதிப்பை உலகு கொடுக்கவும் ஈழத்தமிழர் வெளியக தன்னாட்சியுரிமையை ஏற்கவும் உழைப்போம்என குடிமைக்கு மிடிமையோ அடிமையோ தோன்றி மக்கள் தமது தன்னாட்சியை இழக்கின்ற அபாயங்கள் தோன்றுகின்ற நேரத்தில் பண்பாட்டு மறுமலரச்சியைத் தொன்மைப் பண்பாட்டை மீட்ருவாக்கம் செய்வதன் மூலம் முன்னெடுத்து எப்பொழுதும் தம்நிலைமைக்கு தாழ்மையை ஏற்படுத்தாத பண்பான “மானம்” போற்றுவதன் மூலம் மீளவும் விடுதலை வாழ்வு பெற வேண்டுமென விளக்குகின்றார். இதனால்தான்

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலி னந்நிலையே

கெட்டான் எனப்படுதனன்று

என கால்கழுவுகிற வாழ்வும் தன்னில் தங்கி வாழாது பிறரில் தங்கி அவர்கள் முகவர்களாக மண்ணையும் மக்களையும் அடிமைப்படுத்தும் கோமாளி வாழ்வும் வேண்டாமென்று தெளிவாகக்  கூறும் வள்ளுவர் அவ்வாறு கெஞ்சியும் கொஞ்சியும் அஞ்சியும் சலுகை மனிதரக்ளாக வாழாது எந்தச் சிலுவையையும் சுமந்து மடிந்து உயிர்க்கும் உறுதியால் மரணமற்ற வாழ்வை வாழுமாறு 969 வது குறளால் அழைக்கும் வள்ளுவர்

மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார்

உயிர் நீப்பர் மானம் வரின்

என கவரிமா என்னும் பனிப்பிரதேச மான் அதனுடைய உடலின் மயிர்களை வர்த்தக நோக்கில் போர்வைகள் செய்வதற்காக கத்தரித்தால் குளிர்தாங்காது இறந்து விடும் அவ்வாறு ஒரு மனிதனுடைய மானம் என்னும் தன்னளவில் தான் சுதந்திரமாக வாழும் பிறப்புரிமையான தன்னாட்சி இழக்கப்பட்டால் அவன் அடிமையுற்று மானமிழந்து வாழ்வதை விட மரணத்தால் அமைதி பெறுவதை விரும்புவதான் என எடுத்துரைக்கும் வள்ளுவர்  அடுத்த 970 வது குறளில்

இளிவரின் வாழாத மானமுடையார்

ஒளி தொழுதேத்து முலகு

ஏன வாழ்கின்ற நிலைக்கு தாழ்வு வரின் அதனை எதிர்த்து போராடும் மானம் உடையார் செயற்கரிய செயலைச் செய்வதால் அவர்களை உலகம் தொழுது போற்றும் என மாவீரம் உலகால் கொண்டாடப்படுவதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்துகின்றார்.

இதனை அடுத்த பெருமை என்கின்ற 98வது இயலில் 971 வது குறளில் வள்ளுவர்

ஒளியொருவற் குள்ள வெறுஃகை யிளியொருவற்

கஃதிறந்து வாழ்து மெனல்

என பெருமை என்பது ஒருவர் தான் மற்றவர்கள் மனிதம் வாழச் செய்யாத அருஞ்செயலைத் தான் செய்தல் என்கின்ற உள்ள உறுதி என்கின்ற ஒளி என்பதையும் அவ்வாறு ஒருவர் பிறர்வாழாத் தான் அருஞ்செயல்களைச் செய்யாது தானே வாழ்தல் அவருக்கு இளிவான மதிப்பை உலகில் பதிவாக்கும் என்பதையும் எடுத்து விளக்குவதன் மூலம் மனிதப்பிறப்பின் மகத்துவமே தன் ஆற்றலை அறிவை செல்வத்தை மற்றவர்களுக்குப் பகிர்ந்து வாழ்தல் என்கின்ற உயரிய உண்மையை உள்ளத்தில் பதிக்கின்றார்.

இதற்கு மனித சமத்துவம் போற்றப்பட்டாலே மனித ஆற்றல் சமுதாய வல்லமையாக வெளிப்படும் என்பதால் அடுத்த 972 வது குறளில்

பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

என சாதி மத மொழி நிற பிரதேச பால் பாகுபாடுகளற்ற ஆட்சி முறைமையுள் தான் மனிதன் செயற்கரிய செயலை; செய்வதற்கான தன்மை நடைமுறைச்சாத்தியமாகும் என்பதை மாவீர வெளிப்பாட்டுக்கான முன்நிபந்தனையாக முன்வைக்கின்றார்.

இதற்கு அடுத்த 973வது குறளில் தான் புரட்சிகர செயற்பாட்டுக்கான அழைப்பு

மேலிருந்து மேலல்லார் மேலல்ல கீழிருந்தும்

கீழல்லர் கீழல் லவர்

என வள்ளுவரால் விடுக்கப்படுகிறது.

எனவே தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் என்னும் ஈழத்தமிழர்களின் மண் மீட்புக்கான ஆயுதப் போராட்டம்  என்பது அவர்களின் தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படையில் தங்கள் மேல் சிறிலங்கா தொடுத்த “மக்கள் மேலான போரில்” தங்களுடைய உயிரையும் உடலையும் நாளாந்த வாழ்வையும் பாதுகாப்பதற்கான தேசிய விடுதலைப் போராட்ட ஆயுத எதிர்ப்பும் பாதுகாப்புமே ஒழிய அது பிரிவினைப் போரோ அல்லது பயங்கரவாதச் செயற்பாடோ அல்லது வேறு எந்த இனத்திற்கோ நாட்டுக்கோ எதிரான போரோ அல்ல. ஆனால் சிறிலங்காவும் அதன் ஆதரவு வல்லாண்மைகளும் பிராந்திய மேலாண்மைகளும் விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகள் எனவும் பிறருடைய உயிரைக் காக்கத் தம் உயிரேயே அர்ப்பணித்த கரும்புலி மறவர்களை தற்கொலைப்படையினர் எனவும் இழிவுசெய்து வருகின்றனர்.

சிறிலங்கா முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பின்  மூலம் 176000 ஈழத்தமிழர்களைத் தேசமாகவே இனப்பபடுகொலை செய்த உலக வரலாற்றின் பின்னரும் கடந்த 14 ஆண்டுகளாக இன்று வரை உலகின் பல நாடுகளிலும் அமெரிக்க இந்திய இணைப்புக் கட்டாயத்தின் மூலம் இனஅழிப்பு செய்து அதுவும் சிறுவர்கள் பெண்கள் முதியவர் வலுவிழந்தவர்கள் என்று ஈழத்தமிழ் குடிமக்கள் அனைவரையும் தேசியத் தலைவரின் அன்பு மகனையும் பாலன் என்று கூட பாராது மிருகத்தனமான முறையில் இனப்படுகொலை செய்தமையும் ஈழத்தமிழினப் பெண்களை கூட்டாகவும் தனியாகவும் வன்முறைப்புணர்ச்சிகளுக்கு உள்ளாக்கி இனப்படுகொலை செய்து அவர்களின் நிர்வாண உடலங்களையும் காட்சிப் பொருளாக்கி மனித நாகரிகத்தையே அழித்த பின்னரும் இன்றும் அனைத்துலகச் சட்டங்கள் வழி அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைகளுக்குள் இந்த இனஅழிப்பாளர்கள் செல்லாது பலவழிகளில் பாதுகாத்துக் கொண்டு அவர்களுக்கான பொருளாதாரச்சிக்கலிலும் தாங்களே கைகொடுத்து அவர்களைப் பாதுகாத்து நிற்பதே இன்றைய சமகால அரசியல் வரலாறாக உள்ளது. இந்த நிலைமைகளை மாற்றாது வெறுமனே மாவீரர்நாட்களை பெருமை பேசு விழாக்களாக ஈழத்தமிழர்களும் 14 ஆண்டுகளாகக் கொண்டாடி வருவதும் வேதனையான ஈழத்தமிழர் வரலாறாக உள்ளது.

உண்மையில் இறைமையின் அடிப்படையில்  அவர்கள் தங்களின் பிர்க்கப்பட முடியாத தன்னாட்சி உரிமையின் வழி தங்களுடைய அரசியல் எதிர்காலத்தைத் தங்களின் சொந்த மண்ணாக வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் தொடர்ந்து வரும் இலங்கைத் தீவில் தங்களுடைய தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை மீளவும் அடை முயற்சிப்பது எந்த வகையில் தவறாக உள்ளது. ஒருசிறிய எண்ணிக்கையான விடுதலைப்போராளிகளின் மேல் பாரிய பெரும் படையெடுப்பு நடத்தப்படுகையில் அதனைத் தடுத்த நிறுத்த மேற்கொள்ளப்பட்ட யுத்த தந்திரோபயங்கள் அனைத்துலக முறைமைகளுக்கு எதிரானது என்றால் அதனைச் சுட்டிக்காட்டி நெறிப்படுத்தாமல் முழு ஈழத்தமிழர்களையும் தொடர்ந்தும் இன்று வரை சிறிலங்கா இனஅழிப்பு செய்ய அனைத்துலக வல்லாண்மைகளும் பிராந்திய மேலாண்மைகளும் சிறிலங்காவுக்குத் தொடர்ச்சியாக ஆதரவு அளிப்பது உலக வரலாற்றில் இவர்களும் ஈழத்தமிழர் இனஅழிப்பின் குற்றவாளிகள் என்ற பதிவை இன்றில்லாவிட்டாலும் என்றோ ஏற்படுத்தவே செய்யும்.

1796 முதல் 1972 வரை ஈழத்தமிழர்கள்  தங்களின் இறைமைக்குத் தங்களை மேலாளராகக் கொண்டு ஆட்சி செய்த பிரித்தானிய காலனித்துவம் தங்களை சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சி முறைமைக்குள் இலங்கை அரசு என்ற புதிய ஆட்சி முறைமைக்குள் 04.02. 1948 இல் அடக்கியதால் உருவானதே  சிங்கள பௌத்த பேரினவாதப் பாராளுமன்றக் கொடுங்கோன்மை ஆட்சி எனத் தெளிவாக நிறுவுகின்றனர்.

இந்தப் பாராளுமன்றக் கொடுங்கோன்மைக்கு எதிராக முதலில் அனைத்து சனநாயகவழிகளிலும் முயன்று தங்கள் அரசியல் உரிமைகளை பெற எடுத்த எல்லா செயற்பாடுகளையும் சிறிலங்கா அரசபயங்கரவாதத்தாலும் இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு என்பவற்றையே ஆட்சிக் கொள்கையாகவும் கோட்பாடாகவும் கொண்ட ஆட்சி முறையாலும் சிறிலங்கா தடுத்தது என்பதையும் ஈழத்தமிழர்கள் உலகுக்கு உறுதிப்படுத்தியுள்ளனர். சோல்பரி அரசியல் அமைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட இலங்கை அரசு அந்த அரசியலமைப்பின் 29(2) பிரிவால் இலங்கையில் சிறுபான்மை மதங்களுக்கும் இனங்களுக்கும் அளித்த பாதுகாப்பால் ஈழத்தமிழர்களின் இறைமையின் மீயுயர் ஆட்சியாளர்களாக 1972 வரை பிரித்தானிய மகாராணி அவர்களே விளங்கி வந்தார்.

இந்த அரசியலமைப்புப் பாதுகாப்பை வன்முறைப்படுத்தி  22.05. 1972 முதல் அரசற்ற தேச இனமாக ஈழத்தமிழர்களை சிறிலங்கா மாற்றி இனங்காணக்கூடிய அச்சத்தையே ஈழத்தமிழர்களுக்கான நாளாந்த வாழ்வாக தனது படைகள் மூலம் சிறிலங்கா கட்டமைத்த அனைத்துலகச் சட்டவிரோத செயலில் இருந்து விடுபட்டு வாழத் தங்களுக்கான தன்னாட்சிப் பிரகடனத்தை 1975இல் அக்காலத் தங்களின் அரசியல் தலைவர் சாமுவேல் யேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் தனக்கு காங்கேசன்துறை அடையாளக்குடியொப்பத்தில் கிடைத்த ஆணையின் அடிப்பயைடில் விடுத்து சிறிலங்காப் பாராளுமன்ற ஆட்சியை விட்டு  சனநாயக முறைமையின் வழ விலகினார்.

Toronto மாவீரர் நாள்1 மாவீரர்களுக்குரிய மதிப்பை உலகு கொடுக்கவும் ஈழத்தமிழர் வெளியக தன்னாட்சியுரிமையை ஏற்கவும் உழைப்போம்1977 ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்னும் சுதந்திரத்திற்கான குடியொப்பம் அளித்த தங்களின் தொன்மைத் தாயகத்தை மீள்விக்கும் மக்கள் ஆணையினை நடைமுறைப்படுத்த 1978 முதல் 2009 வரை தங்களுக்கான நடைமுறையரசை சீருடை அணிந்த முப்படைகளினது பாதுகாப்பில் தங்களுக்கான சட்டவாக்க சட்ட அமுலாக்க நிர்வாக ஆட்சிமுறைகளுடன் ஈழத்தமிழர்கள் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தலைமையில். செயற்படுத்தினர்.  அதனை எதிர்த்த சிறிலங்காவின் படைகளுக்கு 1977 குடியொப்ப விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்த முறைமைக்கு ஏற்ப அவர்களுக்கு எதிராகப் போராடியவாறு தங்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் உலக ஏற்புடைமையை எதிர்பார்த்து நடைமுறையாட்சியை முன்னெடுத்து வந்தனர்.

இந்த 31 ஆண்டுகால உலக விடுதலைப் போராட்டங்களில் ஒன்றான தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த தமிழீழத் தேச விடுதலைப் போராளிகளின் போற்றுதல் நாள் தான் மாவீரர் நாள். உண்மையில் இந்நாள் உலக மாவீரர்நானாகவும் உலகால் கொண்டாடப்பட வேண்டிய நாள்.  இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் 1989 முதல் ஈழத்தமிழர்களின் தேசிய நாளாகவும் மாவீர வணக்கப் பண்பாட்டுப் பெருவிழாவாகவும் தொடங்கப் பெற்ற கார்த்திகை 27 இன்றுவரை ஈழத்தமிழரின் தாயகத்திலும் உலகெங்கும் ஈழத்தமிழர்கள் அரசியல் புகலிடம் பெற்று அந்நாடுகளின் குடிகளாக வாழும் நகரங்களிலும் தமிழகத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தமிழரின் பண்பாட்டு வரலாற்றின் நீட்சி என்பதை புதுவை இரத்தின துரை அவர்களின்

“தீயிடும் ஆரிய மரபழித்த

நடுகல் வழிபாடிது

தமிழரின் பழைய மரபு புதுப்பிக்கப்படுகிறது

ஈமத்தாழியும்

நடுகல்லும்

வெறியாட்டுமே நமக்கிருந்த வழிபாடு.

வெற்றி வீரர்கள் வீரத்தெய்வங்களாயினர்

இவர்கள் கற்பனையற்ற கடவுளர்

பகைவரும் திசை பார்த்து

எல்லைப் புறங்களில் இவர்களுக்கு கோயிலிருந்தது

சாவடைந்த பின்பும்

இவர்களுக்கோர் சத்தியிருந்தது

வீரமாதேவியின் விழிகள் திறந்தேயிருந்தன

இன்றும் நிலத்தில் விதைக்கின்றோம்

எங்கள் நிர்மல ரூபங்களை

இது விடுதலைக்கான விதைப்பு

கட்டறுப்புக்கான விலை கொடுப்பு.

உழவும் விதைப்பும்

நாளை நமக்கெனவரும் அறுவடைக்கானது

நம்பிக்கையின் ஒளித்திசையில் பயணம்.

என்னும் கவிதா வரிகளால் உலகிற்கு மாவீரர் நாள் பண்பாட்டு நாள் என்பதையும் மாவீரவழிபாடு தமிழரின் நம்பிக்கை மதச்சுதந்திரங்களின் அடிப்படையில் அவர்களுடைய அடிப்படை மனித உரிமை என்பதையும் தெட்டத் தெளிவாக்குகின்றார்.

எனவே இன்று சிறிலங்கா மாவீரர் நாளை கொண்டாடுவதைத் தடுக்க எடுக்கும் முயற்சிகள் அத்தனையும் சிறிலங்காவுக்கு ஈழத்தமிழர்களைத் தனது குடிகளாக ஆளும் எண்ணமோ நோக்கோ இல்லை என்பதைத் தெளிவாக்குகிறது.

இந்த உண்மையை உலகுக்குத் தெளிவுபடுத்தி ஈழத்தமிழர்கள் தங்கள் வரலாற்றுத் தாயகத்தில்   மீளவும் தங்களுக்கான இறைமையின் அடிப்படையிலும் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளின் பின்னணியிலும் தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தை அமைத்திட அவர்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் உதவ உழைப்பதே மாவீரர்களுக்கான உண்மையான வீரவணக்கமாக அமையும்.

மூத்த அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்