தொடர்ந்து நொருங்கும் அமெரிக்க விமானங்கள்

அமெரிக்காவின் எப்-16 விமானம் ஒன்று தென்கொரியாவின் மேற்கு கடல் பகுதியான Yellow Sea கடல்பகுதியில் இன்று காலை 9 மணியளவில்  வீழ்ந்து நொருங்கியுள்ளது.

விமானி விமானத்தில் இருந்து பராசூட்மூலம் குதித்து தப்பியுள்ளார். தென்கொரியாவின் குன்சன் படைத்தளத்தில் (Kunsan) நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் 8 ஆவது வான்படை பிரிவின் 30 எப்-16 விமானங்களில் ஒன்றே வீழ்ந்துள்ளது. தலைநகர் சியொலில் இருந்து 178 கி.மீ தொலைவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதே விமானம் வீழ்ந்துள்ளது.

விமானம் வீழந்த கடல்பகுதியில் அரிய உயிரினங்கள் அதிகம் வாழ்வதால் விமானத்தில் இருந்து வெளியேறும் நட்சுப்பொருட்கள் சூழலை பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

f 16 4 தொடர்ந்து நொருங்கும் அமெரிக்க விமானங்கள்இந்த வருடத்தில் தென்கொரியாவில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் இது கடந்த மே மாதம் தென்கொரியாவின் வடமேற்கில் ஒள்ள ஓசன் Osan  வான்படைத்தளத்தில் இருந்து புறப்பட்ட எப்-16 விமானம் வீழ்ந்து நொருங்கியிருந்தது. அப்போதும் விமானி உயிர்தப்பியிருந்தார். எனினும் இந்த இரண்டு விபத்துக்களுக்குமான காரணம் கண்டறியப்படவில்லை.

இந்த விபத்தை தொடர்ந்து எப்-16 விமானங்களின் பயிற்சி நடவடிக்கைகளை அமெரிக்கா இடைநிறுத்தியுள்ளது. அமெரிக்காவின் வான்படையில் எப்-16 விமானனங்கள் அதிக முக்கிய பங்கவகிக்கின்றன. 63 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த விமானம் வானில் இருந்து வானுக்கும், வானில் இருந்து தரைக்கும் தாக்குதலை மேற்கொள்ளக்கூடிய நவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ளன.

உக்ரைன் அரசு ரஸ்யாவுக்கு எதிரான போரில் அதனை பயன்படுத்த தொடர்ந்து கேட்டு வருகின்றது. தற்போது நெதர்லாந்தில் உள்ள எப்-16 விமானங்கள் ரேமேனியாவுக்கு அனுப்பப்பட்டு உக்ரைன் விமானிகளுக்கு பயிற்சியும் வழங்கப்படுகின்றன. எனினும் உக்ரைனுக்கு வழங்கப்படும் எப்-16 விமானங்களை 20 நாட்களுக்கு முற்றாக அழிப்போன் என ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஈராக், சிரியா, லிபியா மற்றும் யூகோஸ்லாவாக்கியா மீதான போர்களில் சிறப்பாக செயற்பட்ட இந்த விமானங்கள் தற்போது வீழந்து நொருங்குகின்றன. கடந்த மே மாதம் ஸ்பெயினில் எப் -18 ரக விமானமும் வீழந்து நொருங்கியிருந்தது.

காசா, லெபனான் மற்றும் சிரியா மீதான தாக்குதல்களில் இஸ்ரேல் எப்-16 விமானங்களையே அதிகம் பயன்படுத்தி வருகின்றது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் யப்பனின் கடலில் அமெரிக்காவின் மற்றுமொரு படைத்துறை விமானமான Bell-Boeing V-22 Osprey வீழந்து நொருங்கியதில் 8 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டிருந்தனர். கடந்த ஆகஸ்ட்டு அவுஸ்திரேலியாவில் மாதம் 22 கடற்படையினரை ஏற்றிச் சென்ற இந்த விமானம் வீழ்ந்ததில் 3 பேர் கொல்லப்பட்டிருந்தனர். ஏனையவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.

Osprey2 தொடர்ந்து நொருங்கும் அமெரிக்க விமானங்கள்கடந்த வருடம் மார்ச் மாதம் நோர்வேயிலும் இந்த விமானம் ஒன்று வீழ்ந்ததால் கப்டன் தர அதிகாரி உட்படட பலர் கொல்லப்பட்டடிருந்தனர். அதேமாதம் அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்திலும் இந்த விமானம் வீழ்ந்ததால் ஒருவர் கொல்லப்பட்டார் பலர் காயமடைந்திருந்தனர்.

சிரியாவிலும் போரின் பொது ஒரு விமானம் வீழ்ந்திருந்தது. 90 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த விமானங்களின் தொடர் வீழ்ச்சி அதன் செயற்பாடுகளை முடக்கவேண்டிய நிலையை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியிருந்தது. அண்மையில் குறுகிய காலப்பகுதியில் இந்த வகை விமானங்கள் 4 வீழந்ததுடன், 30 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.

தற்போது அவற்றின் பயன்பாடு நிறுத்தப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதேநிலை எப்-16 விமானங்களுக்கு ஏற்பட்டால் அமெரிக்காவின் பேரிடும் வலு கடுமையாக பாதிக்கலாம்.

கடந்த வருடம்  ஹவாய் தீவில் இரண்டு அப்பாச்சி உலங்குவானூர்திகள் ஒரே நேரத்தில் வீழ்ந்தததும், அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை விமானமான எப்-35 அடிக்கடி விபத்துக்களை சந்தித்து வருவதும், ரஸ்யாவின் விமானங்கள் மர்மமான முறையில் வீழந்து நொருங்குவதும் சாதாரண விபத்துக்கள் என கொள்ளப்படமுடியாது.