வடக்கு – கிழக்கு அரசியல் தொடர்பில் நியூசிலாந்து தூதர் ஆய்வு

இலங்கையில் இருந்து சேவை முடிந்து திரும்பும் கொழும்புக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கேல் அப்லெற்றன் இன்று(27) காலை தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தரை சந்தித்து வடக்குகிழக்கு மாகாணங்களின் அரசியல் நிலை தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதாரம், இனநல்லிணக்கப்பாடு மற்றும் அரசியல் முன்நகர்வு போன்ற பல விடயங்கள் குறித்து பேசியதாக அவர் தனது சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், அவர் இலங்கையில் உள்ள பல அரசியக் கட்சிகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகள் உட்பட பலரை அண்மைக்காலமாக சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இருந்து ஓய்வுபெற்று அடுத்த வாரம் செல்லும் அவர் நியூசிலாந்து அரசின் வெளிவிவகார அமைச்சகத்தில் மூத்த ஆலோசகராக பதவியேற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.