திருகோணமலையில் மாபெரும் “கலாச்சார விழா”

தமிழர்களின் பாரம்பரிய கலை கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையிலான மாபெரும் “கலாச்சார விழா” எதிர்வரும் ஜனவரி மாதம் 6ஆம் திகதி முதல் தைப்பொங்கல் வரை கிழக்கு மாகாணத்தின் தலைநகரான திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.

கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் வழிகாட்டுதலில் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஆகியன இணைந்து இக்கலாசார நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன. *கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 1,500 மாணவர்களின் நடன நிகழ்வு, 500இற்கும் மேற்பட்ட மாணவர்களின் கைவண்ணத்திலான கோலப் போட்டி, ஆண் – பெண் இருபாலாருக்குமான கபடிப் போட்டி, ஆண் – பெண் இருபாலாருக்குமான சிலம்பம் போட்டி, படகோட்டப் போட்டி, மாட்டு வண்டிச் சவாரி, ஏறு தழுவுதல், 1008 பானைகளில் பொங்கல், *பாரம்பரிய கலாசார நிகழ்வுகள் எனப் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வானது தமிழ் மக்களின் கலை கலாச்சார விழுமியங்களை வெளிப்படுத்துகின்ற கலாச்சார விழாவாக ஒழுங்கு படுத்தப்பட்டு அதில் பொங்கல் நிகழ்வும் இடம்பெறவுள்ளதே தவிர இது தைப்பொங்கல் விழா இல்லை என ஏற்பாட்டாளர்களினால் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கான முயற்சியுமாக இது ஏற்பாடாகி வருகின்றது.

அதுமட்டுமல்லாமல் திருகோணமலையில் முதன் முதலாக இடம்பெறுகின்ற தமிழ் மக்களின் பாரம்பரிய கலை கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்ற விழாவாக இது இருக்கின்றது. அத்துடன் இது ஒரு வரலாற்று நிகழ்வாகவும் பார்க்கப்படுகின்றது.