சீரற்ற கால நிலையால் விவசாய செய்கைகள் பாதிப்பு

இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற கால நிலை காரணமாக கிண்ணியா பகுதியில் உள்ள மேட்டு நிலப் பயிர்ச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தோட்டச் செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா உப்பாறு கிராம சேவகர் பிரிவின் மயிலப்பன் சேனை,சோளவெட்டுவான்,காரவெட்டுவான்,கண்டல் காடு போன்ற கிராமங்களில் கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மேட்டு நிலப் பயிர்களான மிளகாய்,மரவெள்ளி ,கத்தரி வெண்டி,கச்சான் உள்ளிட்ட பயிரினங்கள் அழிந்துள்ளதால் நஷ்டமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் பயிர்களை மேற்கொண்டு பயிர்ச் செய்கையை ஆரம்பிக்க பல ரூபாக்களை முதலீடு செய்தும் போதிய விளைச்சல் கிடைக்கவில்லை எனவும் வெள்ள நீரினால் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே இது தொடர்பில் கவனம் செலுத்தி உரிய அதிகாரிகள் தங்களுக்கு தேவையான நஷ்ட ஈடுகளை பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, வடக்கிலும் பெருமளவான நெல் வயல்கள் வெள்ளப்பெருக்கினால் அழிவடைந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 800 ஏக்கர் நெல் வயல்கள் மற்றாக அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.