“இது ஒரு தற்காப்பு நடவடிக்கை” – பாகிஸ்தான் மீதான ஈரான் தாக்குதலை ஆதரித்து இந்தியா கருத்து

ghg “இது ஒரு தற்காப்பு நடவடிக்கை” - பாகிஸ்தான் மீதான ஈரான் தாக்குதலை ஆதரித்து இந்தியா கருத்துபாகிஸ்தான் மீதான ஈரான் தாக்குதல் தற்காப்பு நடவடிக்கை என்பதைப் புரிந்து கொள்ள முடிவதாக இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.

ஈரான் – பாகிஸ்தான் எல்லையில் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள சன்னி தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் அல்-தும் முகாம்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.

இதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர் 3 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில், ஈரான் தற்காப்பு நடவடிக்கையாகவே பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடந்த சம்பவம் ஈரான் – பாகிஸ்தான் என்ற இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சினையின் விளைவு என்றாலும் இந்தியா தீவிரவாதத்துக்கு எதிராக சமரசமற்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அந்த வகையில், ஈரானின் தாக்குதல் ஒரு தற்காப்பு நடவடிக்கை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது” எனத் தெரிவித்துள்ளது.