எஸ்.ரி.எவ். முன்னாள் தளபதி சஜித்தின் கட்சியில் இணைவு – கட்சித் தலைவரிடமிருந்து உறுப்புரிமையையும் பெற்றாா்

1521 எஸ்.ரி.எவ். முன்னாள் தளபதி சஜித்தின் கட்சியில் இணைவு - கட்சித் தலைவரிடமிருந்து உறுப்புரிமையையும் பெற்றாா்இறுதிப் போர் காலத்தில் வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபராகவும் பின்னாளில் விசேட அதிரடிப்படையின் தளபதியாகவும் இருந்த நிமால் லெவ்கே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரிடமிருந்து அவர் கட்சி உறுப்புரிமையை பெற்றுள்ளார்.

சமீபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ள இராணுவ தரப்பை சேர்ந்த மூன்றாவது சிரேஷ்ட அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு போரில் சித்திரவதைகள், காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களுக்கு விசேட அதிரடிப் படையும் காரணமாக இருந்துள்ளதென குற்றச்சாட்டுகள் உள்ளன.

1972இல் பொலிஸில் இணைந்த லெவ்கே 1983இல் விசேட அதிரடிப் படைக்கு உள்வாங்கப்பட்டார். 2009 போரின்போது வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபராக இருந்த லெவ்கே மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அரசாங்கம் அறிமுகப்படுத்திய கட்டாய புனர்வாழ்வு வழங்கலை ஊக்கப்படுத்தினார்.

2019 ஈஸ்டர் தாக்குதல் குறித்து அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னெச்சரிக்கை வழங்காமைக்காக அவர் தன்னை பதவிநீக்கம் செய்தார் என்று சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.