பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினால் ஜனாதிபதியின் அதிகாரம் மேலும் அதிகரிக்கும் – எச்சரிக்கிறாா் சட்டத்தரணி

223 15 பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினால் ஜனாதிபதியின் அதிகாரம் மேலும் அதிகரிக்கும் - எச்சரிக்கிறாா் சட்டத்தரணிபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு அமைய, ஜனாதிபதியின் அதிகாரம் மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளதாக சட்டத்தரணி நுவன் போபகே தெரிவித்தார்.

இந்த சட்டமூலத்திற்கு அமைய, கட்சிகள் மற்றும் அமைப்புகளை தடை செய்யும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் சட்டமூலத்தின் பல சரத்துகளை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டுமெனவும் சில சரத்துகளுக்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக மக்கள் கருத்துக்கணிப்பு அவசியம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்படுமென சட்டத்தரணி நுவன் போபகே தெரிவித்தார். மக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை பொலிஸ்மா அதிபருக்கும் சட்டமா அதிபருக்கும் ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் வழங்கும் பல சரத்துகள் சட்டமூலத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.