33 வருடங்களின் பின் சொந்த காணியில் கால் வைத்த மக்கள் – சிலா் திருப்பி அனுப்பப்பட்டனா்

3 12 16 33 வருடங்களின் பின் சொந்த காணியில் கால் வைத்த மக்கள் - சிலா் திருப்பி அனுப்பப்பட்டனா்வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருடகாலமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணிகள் நேற்று முன்தினம் காணி உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்கப்பட்டன.

அவற்றுள் காங்கேசன்துறை தெற்கு மற்றும் மயிலிட்டி தெற்கு ஆகிய இரு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள காணிகளுக்குள் செல்ல இராணுவத்தினர் நேற்று அனுமதி வழங்கியுள்ளனர்.

காங்கேசன்துறை தெற்கு 235 கிராம சேவையாளர் பிரிவில் 20.3 ஏக்கர் காணிகளும் மயிலிட்டி தெற்கு (தென்மயிலை) 240 கிராம சேவையாளர் பிரிவில் 24 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்ட காணிகளில் பெரும்பாலான காணிகளில் இருந்து இராணுவத்தினர் முற்றாக வெளியேறவில்லை. இன்னமும் ஓரிரு நாட்களில் காணிகளில் இருந்து தாம் வெளியேறிய பின்னர் உங்கள் காணிகளுக்குள் வர முடியும் என இராணுவத்தினர் தம்மை திருப்பி அனுப்பியதாக சில காணிஉரிமையாளர்கள் தெரிவித்தனர்.