ராஜபக்ஷக்களை முன்னிலைப்படுத்தும் மொட்டுக்கு எதிா்காலம் இல்லை – சம்பிக்க

பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ராஜபக்ஷர்களை முன்னிலைப்படுத்தியுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு அரசியல் எதிர்காலம் என்பதொன்று கிடையாது. இடம்பெறவுள்ள தேர்தல்களில் பொதுஜன பெரமுனவுக்கும், ராஜபக்ஷர்களுக்கும் மக்கள் தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனை அவா் தெரிவித்தாா். 

“மே தின கூட்டத்தில் எமது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினரும், ராஜபக்ஷர்களும் குறிப்பிடுவது நகைப்புக்குரியது. 2022 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மக்கள் போராட்டம் பலம் பெற்றதையும், ராஜபக்ஷர்கள் பதவிகளை விட்டு தப்பிச் சென்றதையும் மறந்து விட்டார்கள்” என்றும் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினாா்.

“பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ராஜபக்ஷர்களை முன்னிலைப்படுத்தியுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு அரசியல் எதிர்காலம் என்பதொன்று கிடையாது. இடம்பெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் ராஜபக்ஷர்களுக்கும், பொதுஜன பெரமுனவுக்கும் நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்றும் சம்பிக்க ரணவக்க எச்சரித்தாா்.