ஈழம் – காசா; மனிதாபிமானத்திற்கும் பாரபட்சம் உண்டு – துரைராஜா ஜெயராஜா

03 ஈழம் - காசா; மனிதாபிமானத்திற்கும் பாரபட்சம் உண்டு - துரைராஜா ஜெயராஜா
முள்ளிவாய்க்கால்

ஈழம் பாஸ்தீனம், இரண்டுக்குமே பெரியளவில் வித்தியாசமிருப்பதில்லை. ஈழ நிலத்தில் பௌத்த சிங்கள பேரினவாத அரசு உலகத்தின் ஆதரவோடு தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது. பாலஸ்தீன நிலத்தில் யூதப் பெரும்பான்மைவாத இஸ்ரேலிய அரசு உலகத்தின் ஆதரவோடு பாலஸ்தீனியர்களைப் படுகொலை செய்துவருகின்றது. இரண்டு நிலத்தின் இனப்படுகொலைகளுக்கும் ஆதரவாக அமெரிக்க நிற்கிறது என்பது பொதுவிதி. இந்த ஆதரவினைப் பயன்படுத்திக்கொண்ட இரு அரசுகளுமே தன் படைகளைக் கொண்டு கண்மூடித்தனமான மானுட குலமே வெட்கித் தலைகுனியுமளவிற்கான கொடூரங்களை நிகழ்த்தின. நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன.

ஈழம், பாலஸ்தீனம் ஆகிய தனித் தேசம் கோரிப் போராடுகின்ற இரு தேசங்களிலும் இடம்பெறும் இனப்படுகொலை ஒரேதன்மையானதாகினும், இரு தேசங்களையும் சில நாடுகள் கையாளும் விதம் வித்தியாசமானது. மனிதவுரிமைகளைக் காப்பாற்றுகின்றதாகச் சொல்லிக்கொள்கின்ற சர்வதேச நிறுவனங்கள்கூட இந்த விடயத்தில் இரட்டைவேடமே போடுகின்றன. 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறியமை குறித்து, வருத்தமளிக்கிறது என்கிற வார்த்தையோடு மட்டும் கடந்துவிட்ட ஐ.நா உள்ளிட்ட சர்வதே அமைப்புகள் பாலஸ்தீன விடயத்தில் பாலஸ்தீனத்தைத் தனியே பிரித்துவிடக்கூடியளவிற்கு “அலுவல்” பார்க்கின்றன.

ஈழத்தில், இறுதிப்போரில் மாத்திரம் (மூன்று மாதங்களுக்குள்) 146,679 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர் எனச் சொல்லப்படுகின்றது.

04 ஈழம் - காசா; மனிதாபிமானத்திற்கும் பாரபட்சம் உண்டு - துரைராஜா ஜெயராஜா
முள

இந்தப் படுகொலைகளுக்குத் தன் படைகளை வழிநடத்திய, கட்டளைகளை வழங்கியவர்கள் இலங்கைத் தீவிற்குள்ளேயும், வெளியேயும் அதியுயர் பதவிகளை வகிக்கின்றனர். அத்தரப்பினரை இலங்கையின் ஜனாதிபதியாக்கி வேடிக்கை பார்த்தது உலகம். இந்த மனிதகுல விரோதிகளுக்கு எதிராக சர்வதேச ஊடகங்களும், உள்ளூர் ஊடகங்களும் ஆதாரங்களை வெளிப்படுத்திய போதும் சர்வதேச அமைப்புகள் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஆனால் பாலஸ்தீன இனப்படுகொலைக்குக் கட்டளைகளை வழங்கிக்கொண்டிருக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்குமளவுக்கு சர்வதேச நீதிசார் அமைப்புக்கள் “இறங்கி வேலைசெய்கின்றன”.

கடந்த 06 மாதங்களுக்குள் மாத்திரம் காஸா மீது இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதல்களில் 26,000 இற்கு மேற்பட்ட பாலஸ்தீனிய சிறார்கள் கொலைசெய்யப்பட்டும், காயமடைந்துமிருப்பதாகவும் சிறுவர் பாதுகாப்பு நிதியம் அறிக்கையிட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை நடவடிக்கையின்போது கொல்லப்பட்ட, காயமடைந்த எத்தனை சிறார்கள் பற்றிய தகவல்கள் இந்த அமைப்பிடம் உண்டு? இலங்கையில் சிறார்கள் இராணுவம் நடத்திய எறிகணை வீச்சிக்களின் கொல்லப்பட்டனர். விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அரசு விதித்த மருந்துத் தடைகளால் கொல்லப்பட்டனர்.

இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் கொல்லப்பட்டனர். இறுதியில் இராணுவத்திடம் சரணடைந்த சிறார்கள் பலருக்கு என்ன ஆனதென்றே தெரியாத நிலை இற்றைவரை நீடிக்கிறது. உலகளவில் சிறுவர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராகப் பணியாற்றும் நிறுவனங்களிடம் ஏதாவது தகல்கள் உள்ளனவா?

05 1 ஈழம் - காசா; மனிதாபிமானத்திற்கும் பாரபட்சம் உண்டு - துரைராஜா ஜெயராஜா
முள்ளிவாய்க்கால்

அண்மையில் சர்வதேச ஊடகங்களில் ஒரு ஒளிப்படம் பிரபலமாகியிருந்தது. அதாவது பட்டினிச் சாவினை எதிர்நோக்கும் பாலஸ்தீன சிறார்களைக் காப்பாற்றுவதற்காக இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள், தொண்டு நிறுவனங்கள் பரசூட் மூலமாக உணவுப் பொதிகளை காசா மீது வீசியமையைக் காட்டும் ஒளிப்படமே அது. பாதி உணவு நிலம் முழுவதும் சிந்திச் சிதறிக் கிடக்க அவற்றைக்கூட சிறார்கள் தம் கைகளால் பொருக்கி எடுத்து உண்டதையும் படம்பிடித்திருந்தார்கள். இதே நிலமைகள் 2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலிலும் ஏற்பட்டன. பல சிறார்கள் உணவின்றி இறந்துபோனார்கள். உமியைப் பிடைத்து அதிலிருந்து கிடைக்கும் குருனல் அரிசியைக்கொண்டு உப்பில்லா கஞ்சி காய்ச்சி சிறார்களின் பசியாற்றிய சம்பவங்கள் நடந்துகொண்டிருந்தன. இந்த வேளைகளிலெல்லாம் சர்வதேச மனிதாபிமானம் ஈழத்தின் மீது எட்டியும் பார்க்கவில்லை. எதைச் செய்தாவது புலிகளை அழித்துவிடு என இலங்கை அரசுக்கு உத்தரவு வழங்கிவிட்டு சர்வதேச நாடுகளும், சர்வதேச அமைப்புக்களும் அமைதிகாத்தன.

06 ஈழம் - காசா; மனிதாபிமானத்திற்கும் பாரபட்சம் உண்டு - துரைராஜா ஜெயராஜா
காஸா

பாலஸ்தீன விடயத்தில் இலங்கை அரசு காட்டிவரும் அக்கறையும் மிகுந்த ஆச்சரியமானது. இலங்கை தீவில் தமிழர்களின் சுயநிர்ணயக் கோரிக்கைக்கான போராட்டத்தைப் பயங்கரவாதம் எனப் பச்சைகுத்தி அழித்த மகிந்த ராஜபக்ச, பாலஸ்தீன் விடுதலை பெறவேண்டும் என அரும்பாடுபட்டார். உலகம் முழுவதும் கடன்வாங்கி நாட்டுக்கு சேவை செய்துகொண்டிருக்கும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாலஸ்தீனத்துக்கு உதவியாகப் பெருந்தொகை நிதியை நன்கொடையாக அளித்துள்ளார். அதேபோல இலங்கையில் இப்போதும் ஒட்டுமொத்த தமிழர்களையும் பயங்கரவாதிகளாகக் கருதும் சிங்கள மக்கள் தன்னெழுச்சியாகப் பாலஸ்தீனியர்கள் விடுதலை பெறவேண்டும் என வேண்டிக்கொள்கின்றனர். இனப்படுகொலையில் ஈடுபடும் இஸ்ரேலியர்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நிதிசேகரித்து உதவுகின்றனர். தம் சொந்த நாட்டில் வாழும் இனத்தைத் தாமே இனப்படுகொலை செய்துகொண்டு, பிற நாடொன்றில் இனப்படுகொலைக்குள்ளாகும் இனத்துக்கு உதவுதும், அவர்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதும் எவ்வாறான மனநிலை என்பதை விளங்கிக்கொள்ள முடியிவில்லை.

ஈழத்தமிழர்களைப் போலவேதான் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலையும் நீண்டதொரு வரலாற்றைக்கொண்டது. ஈழத்தமிழர்களுக்கு முடிவிடமான முள்ளிவாய்க்கால் போல பாலஸ்தீனியர்களின் முடிவிடமாக காசா மாறியிருக்கிறது. இந்நிலையில் காசாவில் இடம்பெறும் மனிதவுரிமை மீறல்களையும், இனப்படுகொலைiயும் கண்டித்து அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வெகுசனப் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றது. ஆனால் 2009 ஆம் ஆண்டில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டபோது இந்த வெகுசனத் திரட்சியைக் காட்டமுடியாமல்போனதை ஏன்? இன்று சமூக ஊடகங்கள் பெருகிவிட்டாலும், பேஸ்புக் போன்ற ஊடகங்கள் அப்போதும் இருந்தன. ஆனால் ஈழத்தமிழரின் இனப்படுகொலைப் படங்களைப் பதிவேற்றக்கூட இந்த ஊடகங்களில் அனுமதிக்கப்படுவில்லை. ஏன் இந்த பாராபட்சம்?

07 4 ஈழம் - காசா; மனிதாபிமானத்திற்கும் பாரபட்சம் உண்டு - துரைராஜா ஜெயராஜா
காஸா

உண்மையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் இனப்படுகொலைக்கும், பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய அரசு மேற்கொள்ளும் இனப்படுகொலைக்கும் பெரியளவு வித்தியாசங்கள் இல்லை. இனப்படுகொலை விடயத்தில் இலங்கை, இஸ்ரேல் ஆகிய இரு அரசுகளுமே ஒரே வழித்தடத்திலேயே பயணிக்கின்றன. கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை எப்படி நிகழ்த்துவது? தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தை எப்படி பயங்கரவாதமாக சித்திரிப்பது உள்ளிட்ட விடயங்களில் தம் அறிவைத் தமக்கிடையில் பகிர்ந்துகொள்கின்றன.

இலங்கை அரசு அம்பாறையில் ஆரம்பித்த இனப்படுகொலையின் ஒரு கூறாகிய தமிழர்களின் நிலங்களை அபகரித்து சிங்களவர்களைக் குடியேற்றும் வேலைத்திட்டத்தைத்தான் பாலஸ்தீனம் முழுவதும் இஸ்ரேல் மேற்கொண்டு வருகின்றது. தமிழர்களின் எல்லா இடங்களையும் அபகரித்துக்கொண்டு, எப்படி முள்ளிவாக்காலில் பாரிய இனப்படுகொலையை இலங்கை அரசு தமிழர்கள் மீது நடத்தியதோ, அதே போன்றதொரு நிகழ்ச்சிநிரலைத்தான் இன்று காசாவில் இஸ்ரேல் செய்துகொண்டிருக்கின்றது. எனவே இனப்படுகொலை விடயத்தில் இலங்கை, இஸ்ரேல் ஆகிய இரண்டு பலம்பொருந்திய – சர்வதேச ஆசிபெற்ற நாடுகளும் ஒரே தராசில் வைத்துப் பார்க்கப்படவேண்டியவை. அதேபோல இந்த இரண்டு அரசுகளாலும்

08 ஈழம் - காசா; மனிதாபிமானத்திற்கும் பாரபட்சம் உண்டு - துரைராஜா ஜெயராஜா
Palestinian children receive food at a UN-run school in Rafah, on the southern Gaza Strip on October 23, 2023 amid ongoing battles between Israel and Hamas militants. (Photo by MOHAMMED ABED / AFP) (Photo by MOHAMMED ABED/AFP via Getty Images)

இனப்படுகொலைக்குள்ளாகிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள், பாலஸ்தீனர்கள் ஆகிய இரண்டு தேசிய இனங்களும் விரைவாக இனப்படுகொலைக்குள்ளாகும் இனங்களின் தராசில் சம அளவில் வைக்கப்படவேண்டியவை. சம நீதி வழங்கப்படவேண்டியவை.