உள்ளத்தை ஆற்றுப்படுத்தவே முள்ளிவாய்க்கால் நிகழ்வு – திருமலையான்

30 உள்ளத்தை ஆற்றுப்படுத்தவே முள்ளிவாய்க்கால் நிகழ்வு - திருமலையான்முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்தும் மக்களின் உரிமைகளை மறுதளிப்புச் செய்கின்றனர். வட டிழக்கு மக்கள் மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்டு வந்த போதும் திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் அராஜகமாக பொலிஸாரால் முன்னால் பிரதேச சபை ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

முள்ளிவாய்காலில்  படுகொலை செய்யப்பட்டோர்களை நினைவு கூறுவது பிழையா? யுத்த காலத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக நினைவு தூபி என அமைத்து பல நினைவேந்தல்கள் இடம் பெற்று வருகின்றன.

தெற்கில் பாற்சோறு கொண்டாட்டங்கள் மூலமாக பல நிகழ்வுகள் நடந்தேறுகின்ற போது வடகிழக்கு மக்கள் தங்களது உள ஆற்றுப்படுத்தளுக்காக நினைவேந்தல்களை செய்ய முடியாது தடுத்து நிறுத்துகின்றனர்.

89 உள்ளத்தை ஆற்றுப்படுத்தவே முள்ளிவாய்க்கால் நிகழ்வு - திருமலையான்இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கருத்து தெரிவிக்கையில் சர்வதேச குற்றவியல் விசாரனை வேண்டும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கி அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றியுள்ளது

மூதூரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது கைது செய்யப்பட்டவர்களின் நிலை தொடர்பில் சட்டத்தரணி க. சுகாஷ் செய்த சமர்ப்பணத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவித்த அவர் இந்த மாதம் தமிழர்களுக்கு வலி சுமந்த மாதமாகும் தமிழர்களை 15 வருட காலமாக ஏமாற்றி வரும் இந்த அரசு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பாக அவர்களை நினைவு கூற விடாமல் தடுத்துள்ளது இந்த நிலையில் மூதூரில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஐசிசிபி ஆர் தொடர்பான அறிக்கையை பொலிஸாரிடம் நீதிமன்றம் கோரியுள்ளது இது தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைத்து நீதிமன்ளில் வாதாடிய சிரேஷ்ட சட்டத்தரணி சுகாஷ் மற்றும் முஸ்லிம் சட்டத்தரணிகளுக்கு இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவிக்கிறேன் பொய்யான குற்றச் சாட்டை பொலிஸார் முன்வைத்து நீதிமன்றில் தடை உத்தரவை பெற்று நீதிமன்றை ஏமாற்றியுள்ளனர்.

96 உள்ளத்தை ஆற்றுப்படுத்தவே முள்ளிவாய்க்கால் நிகழ்வு - திருமலையான்தற்போது நீதிமன்றம் தடையை நீக்கியுள்ளது.முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது அவர்கள் உணவை ஆயுதமாக பயன்படுத்தி கஞ்சியை பட்சிலம் குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளனர் இது போன்ற உள ஆற்றுப்படுத்தளுக்காக இதனை நினைவு கூறுகின்றனர் தமிழர்கள் இந்த மாதத்தில் களியாட்டங்களை தவிர்த்து உணர்வு பூர்வமாக நினைவேந்தலில் ஈடுபடுகின்ற வலி சுமந்த மாதமாக காணப்படுகிறது.

உள்ளக பொறி முறை மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது ஒற்றையாட்சி முறையை நீக்கி சமஷ்டியை கொண்டு வரவேண்டும் என்பதுடன் தமிழ் தேச மக்கள் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றார்.

இது தவிர சம்பூர் பகுதியில் கைதாகிய நால்வர் தொடர்பில் பலரும் பல கண்டணங்களை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில்  (16.05.2024) அன்று மாலை முள்ளிவாய்கால் கஞ்சி   வழங்கி வைக்கப்பட்டது. கடந்த வாரம் மூதூர் பொலிஸாரால் சம்பூரில் கஞ்சி வழங்கப்பட்ட போது ஐசிசிபீ ஆர் குற்றச் சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பில்  இது தொடர்பில் தடையை அகற்றக் கோரிய சமர்ப்பணத்தை சிரேஷ்ட சட்டத்தரணி க.சுகாஷ் மன்றில் வாதிட்டார் இதனை தொடர்ந்து மன்றினால் தடை உத்தரவு அகற்றப்பட்டுள்ளதை அடுத்து முள்ளி வாய்க்கால் கஞ்சிகளை வழங்கி வைத்தனர்.திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால் உள்ள வீதியில் உள்ள பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு கஞ்சிகளை அருந்தினர். இதில் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் மாவட்ட அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

97 உள்ளத்தை ஆற்றுப்படுத்தவே முள்ளிவாய்க்கால் நிகழ்வு - திருமலையான்இவ்வாறு நான்கு சந்தேக நபர்களும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் வியாழக்கிழமை (2024.05.17) வெள்ளிக்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தால்  விடுவிக்கப்பட்டனர்.

மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஸான் இவ்வாறு பிணை வழங்கியிருந்தார்.

புதன்கிழமை(2024.05.16) மூதூர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தின் பிரகாரம் அதனை உற்று நோக்கிய சம்பூர் பொலிஸார்  ICCPR சட்டத்தை கைவாங்கியதன் மூலம் பிணை வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இருப்பதன் காரணத்தினாலும் ,ஆஜராகிய சட்டத்தரணிகளின் விண்ணப்பத்திலும் திருப்தி அடைந்த நீதிமன்றமானது குறித்த நான்கு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவித்தது.

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் நான்கு சந்தேக நபர்களும் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டு 13 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில் நகர்த்தல் பத்திரம் மூலம் இவர்கள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய பிணை வழங்கல் தொடர்பான நகர்த்தல் பத்திர விசாரணையில் 8 சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

99 உள்ளத்தை ஆற்றுப்படுத்தவே முள்ளிவாய்க்கால் நிகழ்வு - திருமலையான்இப்படியாக மக்களுக்கான உரிமைகளை கூட செய்ய விடாது இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் தடுக்கப்படுகின்றனர். பெரும்பான்மைக்கு ஒரு சட்டம் சிறுபான்மைக்கு ஒரு சட்டம் என்ற நிலை எழுந்துள்ளது. இந்த நாட்டில் நீதி நிலைநாட்டப்பட்டு அனைத்து சமூகமும் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ வழி சமைத்துக் கொடுக்க வேண்டும் இல்லாது போனால் மக்களின் துயர் துன்பங்களுடன் வடகிழக்கில் உள்ள சிறுபான்மை சமூகம் பாதிக்கப்படக் கூடும்.

அனைவரும் ஒற்றுமையாகவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் என்ற நிலைப்பாடு இருந்தால் அரசாங்கம் மக்களுடைய உணர்வுகளை உணர்வுபூர்வமாக வெளிப்படையாக மதிக்க வழியமைக்க வேண்டும்.