ஜனாதிபதித் தோ்தல் முடிவடைந்த உடனடியாகவே பொதுத் தோ்தல்?

எதிர்வரும், ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு உடனடியாகவே ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரோ அல்லது அதற்கு முன்னதாகவோ பொதுத் தேர்தலை அறிவிப்பதற்கான தனது நோக்கத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலும் நடத்தப்படும் என அவர் அமைச்சரவை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எவர் வெற்றி பெற்ற அதனைத் தொடா்ந்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் 2024 ஜூலை 17 க்குப் பின்னர், செப்டம்பர் 17 மற்றும் அக்டோபர் இடையே ஒரு நாளில் வாக்குப்பதிவு நடத்தப்படுவதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பணிகளை தேர்தல்கள் ஆணைக் குழு மேற்கொண்டு வருகிறது.

ஜூலை 17 க்குப் பிறகு, செப்டம்பர் 17 மற்றும் அக்டோபர் இடையே ஒரு நாளில் வாக்குப் பதிவு நடத்தப்படுவதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்க ஆணைக் குழு அதிகாரம் பெறும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.