போரை எதிர்கொள்ளத் தயாராகும் பிரித்தானியா

01 2 போரை எதிர்கொள்ளத் தயாராகும் பிரித்தானியா
சில தினங்களுக்கு போதுமான உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேமித்து வைக்குமாறு பிரித்தானியா அரசு தனது மக்களை கேட்டுள்ளது மக்களிடம் அச்சத்தையும் பலத்த சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக பிரித்தானியா அரசினால் பிரத்தியோகமாக உருவாக்கப்பட்ட இணையத்தளத்தில் அதன் துணைப் பிரதமர் ஒலிவர் டொவ்டன் இது குறித்த அறிவித்தலையும் ஆலோசனைகளையும் வெளியிட்டுள்ளார்.

மக்கள் தமது பாதுகாப்பை முற்றாக அரசிடம் ஒப்படைக்க முடியாது. அவர்களும் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக வேண்டும் இயற்கை அனர்த்த்தில் இருந்து போர் வரையிலான அனர்த்தங்களுக்கான ஏதுநிலைகள் அதிகரித்து வருகின்றது. எனவே சைபர் தாக்குதல், வெள்ளப்பெருக்கு, மின்சாரம் அற்றநிலை, புதிய உயிரியல் தாக்குதல், புதிய தொற்றுநோய், மற்றும் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சக்களால் நாம் பாதிப்படையலாம் எனவே அதனை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என டொவ்டன் தெரிவித்துள்ளார்.

வீடுகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேறுதல், அவசர நிலையில் தொடர்புகொள்ளும் உறவினர்களின் தொலைபேசி இலங்ககங்களை கைவசம் வைத்திருநத்தல், அடிப்படை முதலுதவி முறைகளை தெரிந்துவைத்திருத்தல்இ அதற்கான பொருட்களை வைத்திருத்தல், குறைந்தது 3 நாட்களக்கு தேவையான உணவு மற்றும் குடிநீரை சேமித்தல் போன்ற அறிவுறுத்தல்கள் அந்த இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.