தோ்தல்களை இரு வருடங்களுக்கு ஒத்திவைக்கக் கேட்டது எதற்காக? திங்களன்று பதிலளிக்கிறாா் பாலித ரங்கே பண்டார

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்தி வைக்கவேண்டுமென தான் கூறிய கருத்து தொடர்பில் எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை பதிலளிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக்
கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கட்சி தலைமையகமாக சிறிகொத்தாவில் நேற்று செய்தியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அவர் இதனை கூறியுள்ளார்.

அதன்போது பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த செவ்வாய்க்கிழமை நான் இவ்விடத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இரண்டு வருடங்
களுக்கு நீடிப்பது தொடர்பிலும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது தொடர்பிலும் கூறியிருந்தேன். அது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டதுடன், சிலர் சிறிகொத்தவுக்கு முன்னால் வந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரின் கேள்விகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து விசேட கருத்தை வெளியிடுவேன். அப்போது என்னிடம் எந்தக் கேள்விகளையும் கேட்க முடியும் என்று தெரிவித்தாா்.