விடுதலைப் புலிகளுடனான போா் எவ்வாறு முடிவுக்கு வந்தது? சரத் பொன்சேகா எழுதும் நுால் இம்மாதம் வெளியீடு

விடுதலைப் புலிகளுடனான போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பது தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நூல் ஒன்றை எழுதி வெளியிடவுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனது இராணுவ வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை அனுபவங்கள் தொடர்பில் எழுதிய நூல் இம்மாதம் 22 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

குறிப்பாக வடக்கில் போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பது தொடர்பில் இதுவரை வெளிவராத பல கதைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நூல் வெளியீட்டை முன்னிட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பு நெலும் பொகுண திரையரங்கில் சிறப்பு நிகழ்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், கட்சியின் உப தலைவா்களில் ஒருவராகவும் உள்ள சரத் பொன்சேகா, அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளாா். அதற்கு அனுமதிக்கப்படாவிட்டால், தனியாகச் சென்று தோ்தலைச் சந்திக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், ஜனாதிபதித் தோ்தலைச் சந்திப்பதற்கு வசதியாகவே யுத்த காலத்தில் இராணுவத் தளபதி என்ற முறையில் தன்னுடைய பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த நுாலை அவா் வெளியிடவுள்ளாா்.