இந்தியப் பிரதமா் மோடி ஓகஸ்ட்டில் இலங்கை வருகிறாா் – ஜனாதிபதி ரணிலின் அழைப்பை ஏற்றாா்

6 3 இந்தியப் பிரதமா் மோடி ஓகஸ்ட்டில் இலங்கை வருகிறாா் - ஜனாதிபதி ரணிலின் அழைப்பை ஏற்றாா்இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ராஷ்டிரபதி பவனில் இருவரும் சந்தித்துப் பேசியதுடன், ​​இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை தலைநகர் டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பிரதமர் மோடியின் பயணம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியிருந்தார். ஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இருவரும் இந்திய பிரதமரின் விஜயம் குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், இந்திய பிரதமரின் பயணம் குறித்து ஆராய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றியிருந்த நிலையில், மூன்றாவது முறையாக நேற்றைய தினம் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றிருந்தார். இதில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.