அதிபா்கள், ஆசிரியா்கள் இன்று கொழும்பில் பேரணி – பொலிஸாா் கண்ணீா்ப் புகை, நீா்த்தாரை தாக்குதல்

14 அதிபா்கள், ஆசிரியா்கள் இன்று கொழும்பில் பேரணி - பொலிஸாா் கண்ணீா்ப் புகை, நீா்த்தாரை தாக்குதல்கொழும்பு – லோட்டஸ் சுற்றுவட்டத்துக்கு அருகில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் இன்று புதன்கிழமை சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், அதிபர்கள், ஆசிரியர்களின் பங்குபற்றுதலுடன் இன்று முற்பகல் 11 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுத்தனர்.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தைக் கலைப்பதற்காகப் பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அதிபர்கள், ஆசிரியர்கள் பாதிப்படைந்தனர்.

இந்தப் போராட்டத்தில் சுமார் 5000 பேர் வரையில் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொழும்பு லோட்டஸ் வீதியில் ஆசிரியர், அதிபர் சங்கங்களின் போராட்டம் மீது பொலிஸாா் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஆசிரியர், அதிபர் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.