இலக்கத் தகடுகள் மறைக்கப்பட்ட மோட்டாா் சைக்கிள்களில் முகமூடிய அணிந்தவா்கள் சிறீதரன் வீட்டின் முன் நடமாட்டம்

7 2 இலக்கத் தகடுகள் மறைக்கப்பட்ட மோட்டாா் சைக்கிள்களில் முகமூடிய அணிந்தவா்கள் சிறீதரன் வீட்டின் முன் நடமாட்டம்இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் யாழ்ப்பாணத்திலுள்ள இல்லத்தின் முன்பாக இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தும் வகையிலான நடமாட்டம் நேற்று அவதானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்பப்பட்டுள்ளது.

இலக்கத்தகடுகள் மறைக்கப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்களில் முகமூடிகள் அணிந்தவாறு வருகை தந்த இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனையும், அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தும் வகையிலான திட்டமிட்ட செயல் என்பதைக் கண்காணிப்புக் கமராக்களில் பதிவாகியுள்ள காணொளிக் காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றுப் பட்டப்பகலில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான கண்காணிப்புக் கமராக்களில் பதிவாகியுள்ள காணொலிக் காட்சிகளைச் சிறீதரனின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் யாழ்ப்பாணம் பொலிஸார், கண்காணிப்புக் கமராக்களில் பதிவாகியுள்ள காணொலிக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.