பொது ஜன பெரமுன வழங்கிய நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளேன் – யாழ்ப்பாணத்தில் தம்மிக்க பெரேரா

9 1 பொது ஜன பெரமுன வழங்கிய நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளேன் - யாழ்ப்பாணத்தில் தம்மிக்க பெரேராஜனாதிபதி வேட்பாளராவதற்காக சிறீலங்கா பொது ஜன பெரமுன தனக்கு வழங்கிய நிபந்தனைகளை தான் பூர்த்தி செய்துள்ளதாகவும் இதன்படி வேட்பாளராவதற்கு தான் தயாராகவே இருக்கின்றேன் என்றும் பிரபல தொழிலதிபரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட தம்மிக்க பெரேரா, அங்கு ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

“நான் அரசியலில் இரண்டு வருடங்களாக இருக்கின்றேன். நான் இருக்கும் கட்சியில் 10 நிபந்தனைகள் எனக்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றை நான் பூர்த்திசெய்துள்ளேன். ஜனாதிபதி தேர்தல் வேட்புமனுவுக்கு இன்னும் 50 நாட்கள் இருக்கின்றது. அதற்குள் 51 வீத வாக்குகளை எடுக்க முடியுமா என்பது தொடர்பில் ஆராய்ந்துதான் முடிவுகள் எடுக்க முடியும். யார் வேட்பாளர் என்பது கட்சியே முடிவு செய்யும். ஆனால் 51 வீத வாக்குகளை உறுதிப்படுத்திக்கொண்டு நான் போட்டியிடத் தயாராகவே இருக்கிறேன்” என்நும் தெரிவித்தாா்.

இதேவேளை தம்மிக்க பெரேரா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதற்கான தனது பிரசாரப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளார். இதன்படி இந்த மாதம் அவர் அதிகாரப்பூர்வமாக பிரசாரத்தை தொடங்கஉள்ளார்.