தொழில் வல்லுநர்களின் வெளியேற்றம் 300 வீதத்தால் அதிகரிப்பு

பிரித்தானிய ஒலிபரப்புச் சேவை அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு இலங்கை தொழில் வல்லுநர்களின் வெளியேற்றம் 300% அதிகரித்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளது.

இதற்கு அரசு விதித்துள்ள PAYE TAX தான் முக்கிய காரணம். இந்த வரி அதிக சதவீதத்தில் அறவிடப்படுகின்றது. 100,000 ரூபாவில் இருந்து 6% முதல் 36% வரை பல வகைகளில் வரிகள் அறவிடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அல்லது நன்மைகளை அளிக்கும் வரி அல்ல என்றும் பிபிசி அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

12 மாத காலத்துக்கு ஒரு மருத்துவரின் சம்பளம் 3 மாத சம்பளத்திற்கு சமமாக வரி விதிக்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டில் 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது செலுத்தப்பட்ட வரியின் சதவீதம் 500% அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, இந்த வரி மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் வருடாந்த வருமானம் 100 பில்லியன் ரூபாவில் இருந்து 144 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக பிபிசி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.