சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக மக்கள் இரவிரவாகப் போராட்டம்

05 1 சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக மக்கள் இரவிரவாகப் போராட்டம்சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆதரவளித்து இன்று திங்கட்கிழமை பொதுமக்களின் போராட்டம் இடம்பெறவிருந்த நிலையில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகள் காரணமாக நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு 8.00 மணியளவிலேயே மேற்படி போராட்டம் ஆரம்பித்து விட்டது.

06 சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக மக்கள் இரவிரவாகப் போராட்டம்வைத்தியர் அர்ச்சுனாவிற்கான இடமாற்றக் கடிதத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில் வைத்து வழங்க முற்பட்டமை மற்றும் சற்று நேரம் கழித்து மாகாண சுகாதார பணிப்பாளர் விசாரணை என்ற பெயரில் அவரைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல பெரும் எண்ணிக்கையான பொலிஸாருடன் வந்து முற்பட்டமை ஆகியவை காரணமாக ஆஸ்பத்திரியில் பெரும் களேபர நிலை ஏற்பட்டது.

சுமார் 400 பொதுமக்கள் ஒன்றுகூடி வைத்தியசாலை முன்றிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிஸார் குவிக்கப்பட்டு அவ்விடத்தில் பதற்றநிலை ஏற்பட்டிருந்தது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்சுனா மீது மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரன மேற்கொண்ட பொலிஸ் முறைப்பாட்டின் அடிப்படையில் வைத்திய அத்தியட்சகரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல பொலிஸார் குவிந்தமையாலேயே பரபரப்பு ஏற்பட்டது.

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் வைத்திய அத்தியட்சகர் கண்டிப்பாக நடந்து கொண்டார் என மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பொலிஸாரால் இரவு வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவை விசாரணைக்கு வருமாறு வற்புறுத்தினர். இருப்பினும் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லை எனக் கூறி அத்தியட்சகர் விசாரணைக்கு செல்ல மறுத்த போதிலும், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதில் வைத்தியர் ஒருவரை அழைத்து வந்தமையால் பொது மக்கள் குழப்பமடைந்தனர்.

ஐந்து நாள்களாக வராத வைத்தியர்கள் தற்போது வைத்திய அத்தியட்சகரை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தும் முகமாக வருகை தந்திருக்கிறார் எனக் கூறி வருகை தந்த வைத்தியருடனும் பொது மக்கள் முரண்பட்டனர். இந்நிலையில் இரவு உணவருந்த வைத்தியசாலைக்கு வெளிய செல்ல முற்பட்ட வைத்தியரை மறித்த பொதுமக்கள், அவரை வைத்தியசாலையை விட்டு வெளியேறக்கூடாது, தாமே உணவைக் கொண்டு வந்து தருகிறோம் எனக்கூறி வைத்தியரை வைத்தியசாலைக்கு உள்ளேயே இருக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இரவிரவாக அங்கு பதற்ற நிலை நள்ளிரவு தாண்டி இப்போது வரை தொடா்கின்றது.