ஜனாதிபதித் தோ்தலுக்கு சட்ட மற்றும் நிதி தடைகள் இல்லை – ஆணைக்குழு தலைவா்

Rathnayake ஜனாதிபதித் தோ்தலுக்கு சட்ட மற்றும் நிதி தடைகள் இல்லை - ஆணைக்குழு தலைவா்ஜனாதிபதித் தேர்தலுக்கு சட்ட மற்றும் நிதித் தடைகள் எதுவும் இல்லை, என்று இலங்கைத் தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க உறுதிபடக் கூறியுள்ளார்.

அத்துடன், தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட நிதிகளில் பிரச்சினைகள் இல்லை எனவும் தேர்தலைத் தொடர தங்களுக்கு சட்டபூர்வ அனுமதியுள்ளது எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தேர்தலைச் சுமுகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக சட்ட அதிகாரிகள், அரச அச்சக திணைக்களம் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த வாரம் ஜூலை 17ஆம் திகதியன்று நிதி அமைச்சின் அதிகாரிகள் தங்களைச் சந்திக்கவுள்ளதாகவும் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதேவேளை, வரும் ஜூலை 14ஆம் திகதிக்குப் பிறகு ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க தேர்தல்
ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் ரத்நாயக்க கூறியுள்ளார்.

இதன்படி, இவ்வருடம் செப்டம்பர் 17 மற்றும் அக்டோபர் 17ஆம் திகதிகளுக்கு இடையில் ஒரு நாளில் தேர்தலுக்கான வாக்குப்பதிவை நடத்துவதற்கு அனுமதிக்கும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.