“பனாகொடை” மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் காலமானார்

thamba “பனாகொடை” மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் காலமானார்ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களில் ஒன்றான தமிழீழ விடுதலை இராணுவத்தின் தலைவராக விளங்கிய தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் (பனாகொடை மகேஸ்வரன்) யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை காலமானார்.

1970 களின் நடுப்பகுதியில் இலண்டனில் உயர்கல்வியை இடைநடுவில் உதறிவிட்டு, தாயகம் திரும்பி தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்ட முதல் தலைமுறை போராளியாவார்.

இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, உயர் பாதுகாப்புச் சிறையான பனாகொடை இராணுவ முகாமில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, இராணுவத்தினருக்கு ‘டிமிக்கி” கொடுத்து விட்டு அதிலிருந்து வெற்றிகரமாக தப்பியமையால் “பனாகொடை மகேஸ்வரன்” என்றும் அவர் அழைக்கப்பட்டார்.

பிற்காலத்தில் பல்வேறு இயக்கங்களும் பிரதான இயக்கங்களால் ஒடுக்கப்பட்ட பின்னர், ஆயுதப் போராட்ட வாழ்வில் இருந்து விலகி இருந்த அவர், அண்மைக் காலத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நட்புறவாகச் செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.