தேர்தல் திகதி அறிவிப்பு தாமதத்தால் சிக்கலில்லை – மகிந்த தேசப்பிரிய

ஜனாதிபதித் தேர்தல் திகதியை அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்ட நாளிலிருந்து அது குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு ஒரு வார கால அவகாசம் எடுத்துக் கொள்வதில் சிக்கல்கள் இல்லை என்று தேர்தல்கள்  ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதித் தேர்தல் ஜூலை மாதம் 24, 25 அல்லது அதனை அண்மித்த திகதிகளில் அறிவிக்கப்படலாம். ஜூலை மாதம் 17ஆம் திகதி தொடக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. செப்ரெம்பர் 18ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது. காரணம் செப்ரெம்பர் மாதம் 17ஆம் திகதி போயா தினமாகும். இதனடிப்படையில், செப்ரெம்பர் 20ஆம் திகதியில் தேர்தலை நடத்த முடியும், எவ்வாறாயினும், செப்ரெம்பர் 20ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அவகாசம் உள்ளது” என்று தெரிவித்தாா்.