சாவகச்சேரியில் இருந்து சமூக விடுதலையை ஆரம்பிக்க வேண்டும் – அசாந்த் வடிவேல்

இன்றைய காலத்தில் அவரைத் தெரியாத ஒருவர் இலங்கையில் இல்லை… ஒரு வைத்தியர் ஒரு சமூக பொறுப்புடன்களை எடுக்க புறப்பட்டதன் விளைவு. நாட்டின் ஜனாதிபதி சுகாதார அமைச்சரை அனுப்பி பிரச்சினையை பார்க்க வைத்துள்ளார்.
தமிழன், ஒரு வைத்தியன் துணிந்து அநீதி களுக்கும் ஊழல்களுக்கும் எதிராக குரல் கொடுத்தபோதும் இன்று அவரின் குரல்வளை நசுக்கப்படுகின்றது. பகிரங்கமாக கேட்டும் தமிழ் தேசியம் பேசி திரியும் சட்டவாளர்கள் எவரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. இப்படித்தான் ஒரு பெரும் தலைவன் வா என்று கூப்பிட்டபோது ஓடி ஒழிந்து, வெளிநாடுகளுக்கு அடைக்கலம் தேடி தப்பி ஓடிய அதே கூட்டம் இன்று போலி தேசியம் பேசித் திரிகின்றது. இன்றும் அதே பல்லவி.
யாராவது வந்துதான் குரல் கொடுக்க வேண்டும். நமக்கு கன்டென்ட் தான் முக்கியம். அப்படிதான் பலரின் வாழ்கை. இங்கே சாதாரண அர்ஜுனக்கு எப்படி ஆதர்வு கிடைக்கும்?. சுகாதார அமைச்சர் கூட இங்கு வந்து ஒரு தள வைத்தியசாலையின் பதில் வைத்திய அதிகாரி இவர்தான் என்று கூறுமளவு அர்ஜுனாவின் தாக்கம் அனைத்து சுகாதார துறைக்குள்ளே ஒரு தாக்கம் செலுத்தியுள்ளது..
ஏன் இவ்வளவு பிரமிப்பு!
தென்னிலங்கை ஊடகங்களில்கூட அர்ச்சுனாவின் தாக்கம் உள்ளது. ஆக எல்லாவற்றையும் மாற்றிய மைக்க உங்கள் அனைவருக்கும் அர்ச்சுனாக்கள் தேவைப்படுகிறார்கள். அர்ச்சுனாக்களின் கதை முடிந்த பின் உங்களுடைய கடமைகள் முடிந்து விடுகிறது. ஏன் ஒவ்வொருவருக்கும் இந்த சமுதாய அக்கறை வருவதில்லை. அநீதி நடக்கும் இடங்களில் கேள்வி கேட்பதில்லை? காரணம் சுயநலம். நீங்கள் மேற்கூறிய அத்தனையையும் அனுபவிக்கவும் வேண்டும். அதேசமயம் சமூக அக்கறை என்று காட்டிக் கொள்ளவும் வேண்டும். ஏன் இந்த மனோநிலை. எதற்காக இந்த சுயநலம்? மறுபக்கம் அர்ஜுனா அவரது தவறு களை மறுக்கவில்லை. வைத்தியர்களின் மோசடிகள் அனைத்தையும் உள்ளிருந்தே சேகரித்து ஆவணப்படுத்தி பிரதி எடுத்து ஏனைய ஆதாரங்களையும்  துல்லியமாகவும் உள்ளேயிருந்து ஆரம்பித்து அவர்களின் காலரில் பிடித்து இருக்க லாம். இப்போது எல்லாரும் ஒன்று சேர்ந்து மறைத்து உசார் ஆகி விட்டார்கள். இரகசியமாக சட்ட ஆலோசனைகளையும் பெற்று சமூக ஊட கத்தை மட்டுமே நம்பி இருக்காமல் முறைப்படி செய்து தப்பிக்க வழிதேடிவிட்டார்கள்.
இதனை நான் கூறுவது கூட அவர் மீதிருக் கும் சுயநலமற்ற அக்கறை காரணமாக. தற்போது பிரச்சினைக்குரிய வைத்தியர்கள் அவர் மீதான வழக்கு தனிப்பட்ட வாழக்கு ஆக்கிவிட்டார்கள். வேறு விடயங்கள் பற்றி அவர் யோசிக்கமுடியாமல் ஆக்கியுள்ளார்கள். கேபிட்டல் ஊடகம் போன்ற சிலர் டிரெண்டிங் விளம்பரத்திற்கு அர்ச்சுனாவின் வாயைக் கிளறி பலதையும் பேச வைக்கிறார்கள். இது புரியாமல் அவரும் புலம்புகிறார். இதனால் அவரின் பெறுமதி அவருக்கே புரிவதில்லை. பின்னாளில் இலங்கையின் சுகாதார துறைக்கே செயலாளர் ஆக வர தகுதியுடைய தமிழர். அரைகுறை இல்லை call me as sir புகழ் யாழ் மாவட்ட வைத்திய அதிகாரி பிரணவனுக்கே பாடம் எடுத்தவர்.
ஆங்கிலத்தில் கூறுவார்கள் wooden spoon என்று அதைபோல இங்கு ஒரு பிராந்திய சுகாதார அதிகாரி இருக்கிறார், அவரின் ஆளுமை ஆமை போல. அதுவே அனைத்துப் பிரதேச வைத்தியசாலைகளுக்கும் வசதியாக நிர்வாகம் செய்ய முடிகிறது. சுற்றுநிருபம் படி அனைவரும் வேலை செய்தால் புதிதாக வருபவர் ஏன் நிர்வாகம் பற்றி பேச போகிறார்.  ஆனால் அர்ஜுனா சிங்களம், ஆங்கிலம் என மனுஷன் கணணித் தொழில்நுட்பத்தில் கூட அதிக திறன் உள்ளவர். அதைவிட MBBS, மேலதிகமாக மருத்துவ நிர்வாகத்துறை படித்து உள்ளார். அடுத்து அவர் வெளிநாட்டில் படிக்க செல்லுவார் அது இனி நடக்குமோ தெரியாது.
Consultant of surgery இருந்தால் வெளிநாடு போய் செட்டில் ஆகி இருக்கலாம். இலங்கை மருத்துவ நிர்வாகம் படித்து அங்கு போய் வேலை கேட்டால் சந்தி சிரிக்கும். ஆனால் அவருக்கு பிற மொழி கல்வியை ஒரு வருடம் முடித்தால் அது முடிந்த பின் அவர் எதிர்காலமே வேறு. சபிக்கப்பட்ட தேசத்தில் எதுவுமே செய்யமுடியாது. இப்போது அவர் சேவையில் இல்லை. ஜனாதிபதியை சந்தித்து பேசினால் தீர்வு உண்டு.
கருச்சிதைவு செய்ததாக குற்றம் சாட்டப் பட்ட வைத்தியர் சஃபியை கூட நீதிமன்றம் விடுவித்துள்ளது. இவர் மீது வழக்குகள் பல. அர்ஜுனா இனி அவர் சேவையில் இருந்தால் அவர் மீது பல கண்கள் குறிவைக்கப்படும். அவரின் குடும்பம் நண்பர்கள் பள்ளித் தோழர்கள் அவருக்கு ஆறுதலாக இருக்க வேண்டும். ஆனாலும் மனிதன் அனைத்து சுயநல வைத்தியர்களையும் அதிகாரிகளையும் ஓரளவு திருத்தி வேலை பயத்துடன் செய்ய வைத்துள்ளார்.
பலர் திருந்தி விடுவார்கள். உடனே வடக்கில் மருத்துவ மாஃபியா கொஞ்சம் அடங்கியுள்ளது. மக்களுக்கும் பயந்து உள்ளது. உடனடியாக சுகாதார அமைச்சு வைதியர்களுக்கும் பயோமெட்ரிக் வரவுப்பதிவு பொறிமுறையை நடைமுறைபடுத்த வேண்டும். வைதியர்களின் ஒழுங்கான வரவு கண்காணிக்க படவேண்டும். தனியார் வைத்தியசாலைக்கு குறித்த நேரத்திற்கு சரியாக செல்லும் அதே வைத்தியர்கள் அரச வைத்தியசாலைக்கு பிந்தி போனால் கேள்வி கேட்க கூடாது. சேர்க்கு கோவம் வரும்… என்ற வழக்கம் மாறவேண்டும்
தாதியர்கள், நோயாளர் விடுதிக்கு பொறுப் பானவர்கள், மருத்துவத்துறை மாணவர்கள் ஆகி யோர் கோப்புக்களை தூக்கிகொண்டு ஆட்டு மந்தைகள்போல பின்னுக்கு ஓடகூடாது. அவர்கள் தமது கடமைகள் மற்றும் பொறுப்புக்களை உணரவேண்டும். முதலில் வடக்கில் இதனை உடனே ஆரம்பிக்க வேண்டும். அதை கண்காணிக்க வேண்டும்.
மேலும் பல அக்கறையான வைத்தியர்கள் வெளிநாட்டுக்குச் செல்லக்கூடிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றார்கள். வைத்தியசாலையில் நடை பெறும் அசட்டையீனங்கள், ஊழல்கள் மற்றும் மோசடி களும் அதற்கு காரணமாகின்றன. சவாக் சேரியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.