ஜப்பானை நோக்கி ஹாய்சென் புயல்; 8இலட்சம் மக்கள் வெளியேற்றம்

ஜப்பானின் தெற்குப் பகுதியை நோக்கி ஹாய்சென் சூறாவளி நெருங்குவதால், அங்கிருந்து 8 இலட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பானின் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதியை நோக்கி ஹாய்சன் சூறாவளி வேகமாக நெருங்கி வருகின்றது. ஜப்பானின் தெற்கில் யகுஷிமா தீவிலிருந்து 70 கிலோ மீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ள இந்தப் புயல் 35 கிலோமீற்றர் வேகத்தில் முன்னேறி வருகின்றது.

இன்று (06) இரவு 216 கிலோமீற்றர் வேகத்தில் கியூசூ தீவை புயல் தாக்கக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதுகாப்புக் கருதி, 8.1 இலட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

புயல் தாக்கக்கூடும் என அச்சம் உள்ள 10 மாகாணங்களைச் சேர்ந்த 55இலட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.