கோட்டா அரசுக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கொழும்பில் உண்ணாவிரதம்

கிரிக்கெட் வீரர் கொழும்பில் உண்ணாவிரதம்

கிரிக்கெட் வீரர் கொழும்பில் உண்ணாவிரதம்

கோட்டா அரசுக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் கொழும்பில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலக வலியுறுத்தி காலிமுகத்திடலில் இன்று வெள்ளிக்கிழமை 7வது நாளாகவும் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

காலிமுகத்திடல் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவினை தெரிவித்து வரும் நிலையில், இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இன்று காலை காலிமுகத்திடலுக்கு சென்ற அவர் தன்னை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்திய பின்னர் ஒரு நாள் (24 மணி நேரம்) அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.