அவுஸ்திரேலிய கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பொருள் ? – விண்வெளி நிறுவன அதிகாரிகள் ஆய்வு

கான்பெர்ரா: அவுஸ்திரேலியாவின் கடற்கரை பகுதியில் ஒதுங்கிய மர்ம பொருள் இந்திய ரொக்கெட் இன்ஜினாக இருக்கலாம் என ஐரோப்பிய விண்வெளி நிறுவன பொறியாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடக்கே 250 கி.மீ தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. ஒரு சிறிய கார் அளவுக்கு உருண்டையாக இருக்கும் அந்த பாகம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ரொக்கெட் இன்ஜின் பாகமாக இருக்கலாம் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக அவுஸ்திரேலிய விண்வெளி நிறுவனம், வெளிநாடுகளைச் சேர்ந்த விண்வெளி நிறுவனங்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐரோப்பிய விண்வெளி முகமையின் பொறியாளர் ஆண்ட்ரியா பாய்ட், அவுஸ்திரேலிய கடற்கரையில் ஒதுங்கிய பாகம் இந்திய ரொக்கெட்டின் மேல் அடுக்கு இன்ஜின் போல் தெரிகிறது என தன்னுடன் பணியாற்றுபவர்கள் கூறுவதாக தெரிவித்துள்ளார்.